WATCH: தானாக நகர்ந்து சென்ற சக்கர நாற்காலி; பீதியடைந்த காவலாளி..!
வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற திகில் வீடியோ காட்சி!!
வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற திகில் வீடியோ காட்சி!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், சண்டிகர் மருத்துவமனையின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி தானாகப் புறப்பட்டு சாலையில் சென்று நின்ற வீடியோ காட்சி வைரளாகி வருகிறது.
அம்மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் இந்த வியக்க வைக்கும் நிகழ்வு நடந்துள்ளது. இரண்டு இருக்கைகளுக்கு நடுவே நிறுத்தப்பட்டிருக்கும் சக்கர நாற்காலியானது திடீரென பின்னோக்கி நகர்ந்தது. அதை தொடர்ந்து யாரோ தள்ளிக் கொண்டு செல்வது போலச் முன்னோக்கிச் சென்ற அந்த சக்கர நாற்காலி ஒரு கட்டத்தில், சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டிச் சென்றது. இறுதியில் சாலை வரை சென்ற அந்த சக்கர நாற்காலியின் பயணம் அத்துடன் நிறைவு பெற்றது.
சக்கர நாற்காலியின் திடீர் திகில் பயணத்தை இரவுப் பணியில் இருந்த காவலாளி மனோஜ் குமாரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மிகவும் வழுவழுப்பான தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சக்கர நாற்காலி மெல்லிதாக வீசிய காற்றின் காரணமாக அதுபோன்று நகர்ந்திருப்பதாக பீதியுடன் கூறினார். என்னதான் அமானுஷ்ய சக்திகள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் இது போன்ற சில சம்பவங்கள் நடக்கும் போது நம்மை அது பீதியில் ஆழ்த்துகிறது.