மக்களவை தேர்தல் மீதான எதிர்பார்ப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நாட்டு மக்களின் கவனம் உலக கோப்பை கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30-ஆம் நாள் இங்கிலாந்தில் துவங்குகிறது. இத்தொடரில் பங்கேற்க பத்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பத்து அணிகளும் இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சி ஆட்டதினையும் துவங்கிவிட்டனர்.


அந்த வகையில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா அணி தனது முதல் பயிற்சி ஆட்டதினை விளையாடியது. இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வழக்கம் போல் தனது ரசிகர்களை ஏமாற்றியது. எனினும் இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியின் மீது ரசிகர்களின் கோவம் அவ்வளவாக இல்லை.



இதற்கிடையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவ்வப்போது அணி வீரர்களுடன் சிறு நேர்காணல் நட்த்தி, அதில் கிடைக்கும் சுவாரசியாமான நிகழ்வுகளை வீடியோவாக பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி துணை தலைவர் ரோகி ஷர்மாவிடம் நடத்திய சிறு நேர்காணலினை பகிர்ந்துள்ளது.


இந்த வீடியோவில் தனது அணி பற்றி கேள்வி எழுப்ப, அதற்கு வேடிக்கையான வகையில் பதில் அளிக்கின்றார் ரோகித் ஷர்மா. வீடியோ இணைப்பு கீழே...


இந்த வீடியோவில் ஹார்டிக் பாண்டையா பற்றி கருத்து தெரிவித்துள்ள ரோகித்., ஹார்டி மொபைல் பிரியர் எனவும், செல்பி பிரியர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.