கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள்
கர்நாடகாவில் கம்பீரத்துடன் நடு ரோட்டில் நடந்து செல்லும் யானையை மக்கள் வியந்து பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
யானையை பார்ப்பது என்பதே வியப்பு தான். அதிலும் தந்தம் கொண்ட யானை உயரமாக ராஜ நடையிட்டு வந்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்து பாருங்கள். உடலை சிலிர்க்க வைக்கும் அப்படியொரு காட்சியை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. நேரில் பார்க்கவில்லை என்றாலும் வீடியோவிலாவது பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டிலோ அல்லது வட மாநிலங்களிலோ அல்ல. நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.