டந்த சில நாட்களாக, நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் இளம்பெண் ஒருவர் சிங்கம் அடைப்புக்குள் நுழைந்து, சிங்கத்தின் முன் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கத்திடம் இருந்து சுமார் 14 அடி தூரத்தில் நின்று நடனமாடடும் இவரது வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த வீடியோவில் இளம்ம்பெண் நடனம் ஆட, நடனமாடும் பெண்ணின் மீது சிங்கம் சிறிதும் ஆர்வம் காட்டாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இந்நிலையில் இந்த இளம்பெண் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், சிங்கத்தின் கூட்டிற்குள் குதித்ததால் இவர் கைது செய்யப்படவில்லை, மாறாக கடை திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி, நியூ ஜெர்சியிலுள்ள கியர்னியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.



Myah Autry என அடையாளம் காணப்படும் இவர், தன்னை தானே ஒரு சிங்கம் என அழைத்து வருகிறார். ஆம், இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி Myah Autry-யை பிரபலமாக்கி சென்றுள்ளது. சிங்கத்தின் கூட்டிற்குள் யாரால் தைரியமாக செல்ல கூடும், மற்றொரு சிங்கத்தால் மட்டுமே தைரியமாக செல்லகூடும், அவ்வாறு சிங்கத்தின் கூட்டிற்குள் தைரியமாக சென்ற நானும் ஒரு சிங்கம் தான் என்பது அவரது கூற்று...


இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்., "எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை, ஏன் நான் பயப்படவேண்டும். மனிதர்கள் மட்டும் அல்ல, மிருகங்களிடமும் எனக்கு பயன் இல்லை., ஏன் சிங்கத்திடம் கூட எனக்கு பயன் இல்லை. ஏனெனில் சிங்கத்தை எனக்கு பிடிக்கும், அதேப்போல் சிங்கதிற்கும் என்னை பிடிக்கும். ஆக நான் சிங்கத்தை கண்டு அஞ்ச தேவையில்லை" என குறிப்பிட்டுள்ளார். என்றபோதிலும் தன் மீது சுமத்தப்பட்ட திருட்டு வழக்கினை குறித்து அவர் மனம் திறக்க மறுத்துள்ளார்.