ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண், பிறகு நடந்த அதிசயம்: வைரல் வீடியோ
Rare Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மை நிலைகுலையச் செய்யும் வகையில் உள்ளன. தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
எனினும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மை நிலைகுலையச் செய்யும் வகையிலும் உள்ளன. தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது.
இந்த வீடியோ ஒரு பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவான ஒரு சம்பம் போல தோன்றுகிறது. இதில் ஒரு பெண் தன் குழந்தையுடன் ஆற்றில் குதிக்கச் செல்வதையும், அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் அவரை ஒருவர் காப்பாற்றுவதையும் காண முடிகின்றது.
ஆற்றில் குழந்தையுடன் குதிக்கும் பெண்
வீடியோவில் துவக்கத்தில், ஒரு பெண் தனது குழந்தையின் கையை பிடித்துக்கொண்டு சாலையில் நடந்து செல்வதை காண முடிகின்றது. திடீரென்று ஏதோ நினைவு வந்தது போல, ஆனால், எந்த வித பதட்டமும் இல்லாமல், அவர் பாலத்தின் விளிம்புக்கு செல்கிறார்.
மேலும் படிக்க | சீண்டிய நபரின் கைகளை பதம் பார்த்த பாம்பு: பதற வைக்கும் வைரல் வீடியோ
தன் குழந்தையை தூக்கி தானும் குதிக்கத் தயாராகிறார். அவர் தனது குழந்தையுடன் சேர்ந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள தயாராகிறார். ஆனால், அந்த வழியாக வரும் பேருந்தின் ஓட்டுநர் சரியான நேரத்தில் பேருந்தில் இருந்து கீழே இறங்கி அவரை காப்பாற்றி விடுகிறார்.
மனதை பதபதவைக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:
பெண் தற்கொலை செய்வதை தடுக்க, பேருந்து ஓட்டுநர் அவரை விரைவாக வந்து காப்பற்றியதையும், அவரையும் அவரது குழந்தையையும் உடனடியாக பேருந்திற்குள் அழைத்துச்சென்றதையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ எந்த இடத்தைச் சேர்ந்தது என்பது குறித்து இப்போது எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது @TheFigen_ என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் இணையவாசிகளின் கமெண்டுகளும் கிடைத்து வருகின்றன.
மேலும் படிக்க | கோழியை விரட்டி கடித்து கடிவாங்கிய எலியின் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ