பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Xiaomi, 2.5 நாட்களில் 2.5 மில்லியன் Xiaomi மொபைல்களை விற்று சாதனை படைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி, தீபாவளி என அக்டோபர் மாதம் பண்டிகை மாதமாக கலைகட்டியுள்ள நிலையில் வரும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் விதமாக Amazon, Flipkart உள்பட அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது.


இதன் காரணமாக கடந்த அக்டோபர் 9 பிற்பகல் 12 மணியளவில் துவங்கி அக்டோபர் 11 இரவு 7 மணிவரையில் சுமார் 2.5 மில்லியன் Xiaomi மொபைல்கள் விற்பனையாகியுள்ளது. கிட்டத்தட்ட 2.5 நாட்களில் 2.5 மில்லியன் Xiaomi மொபைல்கள் விற்பனையாகியுள்ளது என Xiaomi  நிறுவனம் தெரிவித்துள்ளது.


விற்பனை செய்யப்பட்ட Xiaomi  பொருட்களில் Mi LED TVs, Mi Band 3, Mi Power Banks, Mi Earphones, Mi Routers மற்றும் Mi உதிரி பாகங்கள் உள்ளிட்டவை அடங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்தாண்டு 20 - 22 செப்டம்பர், 2017 பண்டிகை கால விற்பனையில் Xiaomi நிறுவனம் 1 மில்லியன் பொருட்களை விற்பனை செய்தது. இந்த அறிக்கையின் படி தற்போது Xiaomi 2.5 மடங்கு விற்பனையினை அதிகரித்துள்ளது. 


Xiaomi நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தாண்டு சலுகை விற்பனையில் 100,000 Mi LED TV-க்கள், 400,000 Mi எக்கோ சிஸ்டம் தயாரிப்புகள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.


Xiaomi தயாரிப்புகளில் அதிக அளவு விற்பனை கண்டது Redmi 6A தான் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. உதிரி பாகம், கூடுதல் உபகரணங்கள் என அனைத்து தலைப்பிலும் Redmi 6A தயாரிப்பு தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. சலுகை விற்பனை காலம் நடப்பில் உள்ள நிலையில் Xiaomi தயாரிப்புகளின் விற்பனை எண்கள் ஆனது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் இந்நிறுவனம் தெரிவத்துள்ளது!