Watch: மக்களின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் பிளாஷ் மாப் வீடியோ!
இணையத்தை கலக்கும் இளம் பாக்கிஸ்தானியனின் பிளாஷ் மாப் வீடியோ காட்சி!
இணையத்தை கலக்கும் இளம் பாக்கிஸ்தானியனின் பிளாஷ் மாப் வீடியோ காட்சி!
மும்பை: கராச்சி மாலில் பாகிஸ்தானிய இளைஞர் ஒருவர் பஞ்சாபி பாடலுக்கு பிளாஷ் மாப் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சுமார் 6.8 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.
இந்த வீடியோவில் நடனமாடும் இளைஞர் இளம்சிவப்பு நிறத்தில் சட்டை மற்றும் கருப்புநிற பேன்ட் ஒன்றை உடுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் கராச்சி மாலில் பஞ்சாபி பாடலான "ஷன்குளி ஷன்குளி மேரா நாம்" என்ற பாடலுக்கு மிகவும் அழகாக நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைராக்கி வருகிறது. இந்த வீடியோவை பலரும் லைக் செய்து ஷேர் செய்தும் வருகின்றனர்.
இணையத்தில் நமக்கு தெரிந்த வரை பெண்களின் நடன வீடியோக்கள் தான் அதிக விரலாக பரவும். இவரின் எளிமையான நடன அசைவுகள் பார்வையாளர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது.
இதோ அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது....!