விரைவில் அனைத்து ரயில்களிலும் CCTV மற்றும் Wifi வசதி!
விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) மற்றும் Wifi வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) மற்றும் Wifi வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவிக்கையில்...
"நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் தூய்மை படுத்துவம், பாதுகாப்பானதாக மாற்றவும், அனைத்து வசதிகள் உள்ளதாகவும் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் Wifi வசதியுடன் CCTV கேமிர பொருத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையை அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீப காலங்களில், இந்திய இரயில்வே பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், பலவற்றிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தவகையில் போக்குவரத்து எதிர்பார்ப்பு அளவை அடிப்படையாகக் கொண்ட புதிய நிலையங்களை நிர்மாணிப்பதில் சில வசதிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்திய ரயில் நிலையங்களில் கீழ்காணும் திட்டங்கள் செயல்படுத்தப் படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
தளங்களில் பயணிகளின் பாரத்தினை எளிதாக்குவதற்கு, நிலையங்களில் லிஃப்ட் மற்றும் எக்ஸ்கலேட்டர்கள்.
ரயில் பயணம், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள நபர்கள் ஆகியோருக்கு முன்னர் பயணிகள் பயணிக்கும் போது பேட்டரி இயக்கப்படும் வாகனங்கள்.
சக்கர நாற்காலி உதவி தேவைப்படும் பயணிகளுக்கு யத்ரி மித்ரா சேவா.
நன்கு வசதிவாய்பூட்டப்பட்ட ஒய்வு அறைகள், காத்திருக்கும் அறை
127 முக்கிய நிலையங்களில், Wi-fi வசதி
இதை தவிர பயணிகளின் டிக்கெட் புக்கிங் வேலைபாடுகளை குறைக்க பல சிறப்பு திட்டங்கள், குறிப்பாக SBI வங்கியுடன் இணைந்து CashLess டிக்கெட் முறையினை அறிமுகப்படுத்த உள்ளது என மக்களவை உறுப்பினர் ராஜேன் கோஹெயின் (Shri Rajen Gohain) அவர்கள் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்