நான்காவது மாடி பால்கானியில் தொங்கிகொண்டிருந்த குழந்தையை மரணத்திலிருந்து காப்பாற்றிய ஸ்பைடர் மேன்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரிஸில் குடியிருப்பு கட்டிடத்தில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



கசாமா என்பவர் ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து பாரிசுக்கு குடிபெயர்ந்தவர். அவர் சற்றும் யோசிக்காமல் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவி வருகிறது. இவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.



கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, ப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!