சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி.. ராஜவாழ்க்கை அமையும்!!
Sani Vakra Nivarthi: சனியின் நேரடி சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் தனது ராசியை மாற்றுகிறார். சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் மிகவும் அதிகமாக இருக்கின்றது.
தற்போது சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார். மிக விரைவில் அவர் தனது நிலையை மாற்றவுள்ளார். நவம்பர் 4, 2023 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பரில் மீண்டும் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தியால் அத்கப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சனியின் வக்ர நிவர்த்தி இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், செழிப்பையும், வெற்றியையும் தரும். மேலும் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளையும் இது நீக்கும். சனியின் நேரடி சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனி வக்ர நிவர்த்தியால் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள்
ரிஷப ராசி
சனியின் வக்ர நிவர்த்தியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு அதிக மரியாதையும் கிடைக்கும். இவர்களின் செல்வம் மற்றும் வங்கி இருப்பு அதிகரிக்கும். கடன்கள் தீரும். ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். புதிய வேலை தேடுபவர்களின் கனவு நனவாகும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் குபேர யோகம்.. 2024 இல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி சாதகமான பலன்களை அளிக்கும். சிறிய அளவு கடின உழைப்பு அதிக அளவு பலன்களை தரும். இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி பல சுப பலன்களைத் தரும். உங்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். செல்வமும் சொத்தும் பெருகும். சட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுங்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்ப ராசி:
கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் ஒவ்வொன்றாக நீங்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். இதனால் நிதி நிலை மேம்படும். வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ராஜயோகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ