இந்த 5 விஷயங்களை மட்டும் உங்கள் மனைவியிடம் சொல்லவே கூடாது!
உங்களின் குடும்ப உறவுகளை வலுப்படுத்த வாஸ்து சாஸ்திரத்தின் படி சாணக்யா பல முக்கியமான விஷயங்களைப் கூறியுள்ளார். சாணக்யாவின் கூற்றுப்படி கணவன் தன் மனைவியிடம் சொல்லக் கூடாத ஐந்து விஷயங்கள் உள்ளன.
சாணக்யா தனது குறிப்புகளில் கணவன் - மனைவி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பல வழிமுறைகளைப் பற்றி கூறியுள்ளார். அன்பு, உறவு, வேலை, தொழில், மரியாதை என அனைத்து விஷயங்களையும் அவர் தனது வேதங்களில் குறிப்பிட்டுள்ளார். கணவனும் மனைவியும் தங்கள் உறவை வலுப்படுத்த விரும்பினால், அவர்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சாணக்யா அவரது குறிப்பில் கூறியுள்ளார். இது தவிர, உங்கள் உறவை அன்புடன் முன்னோக்கி கொண்டு செல்ல, நீண்ட காலம் சண்டையில்லாமல் இருக்க உறவைக் கெடுக்கக்கூடிய 5 விஷயங்களைத் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கணவன் தன் மனைவியிடம் சொல்ல கூடாத 5 விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | உதயமாகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் வெற்றி, அபரிமிதமான பண வரவு
தான தர்மம்
கணவன் தான் எவ்வளவு தானம் செய்கிறான் என்பதை மனைவியிடம் கூற கூடாது என்று சாணக்கியர் தனது சாஸ்திரத்தில் எழுதியுள்ளார். இதனால், தர்மத்தின் முக்கியத்துவமும் பலனும் இல்லாமல் போய்விடுகிறது என்பது நம்பிக்கை. இது தவிர, ஒரு கையால் தொண்டு செய்தால், மற்றொரு கைக்கு அது கூடத் தெரியாத வகையில் செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் தான தர்மத்தால் வரும் புண்ணியம் உங்களுக்கு கிடைக்காது. எனவே தானம் எப்போதும் ரகசியமாக செய்யப்பட வேண்டும்.
வருவாய்
சாணக்கியர் தனது நெறிமுறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து சம்பாதிப்பவராக இருந்தால், அதைப் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்லவே கூடாது என்று எழுதியுள்ளார். மனைவி தன் கணவனின் மொத்த வருமானம் பற்றி தெரிந்து கொண்டால், அவள் வீட்டு செலவுகளை அதிகரிப்பதாக கூறியுள்ளார். அது உங்கள் வீட்டு பட்ஜெட்டை கெடுத்துவிடும். எனவே, உங்கள் வருமான ஆதாரம் எப்போதும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உங்கள் பலவீனம்
சாணக்யாவின் கூற்றுப்படி, ஒருவர் தனது பலவீனத்தைப் பற்றி ஒருபோதும் தனது மனைவியிடம் சொல்லவே கூடாது. இது அவர்களின் உறவுகளை கெடுக்கலாம் என்று கூறியுள்ளார். உண்மையில் கணவன்-மனைவிக்குள் சண்டை வரும்போது தெரிந்தோ தெரியாமலோ இப்படிச் சில விஷயங்களைச் சொல்லி மற்றவரின் மனதைப் புண்படுத்துவார்கள் என்று சாணக்கிய கூறுகிறார். இது தவிர இதுபோன்ற சூழ்நிலையில், மனைவிகள் தங்கள் கணவர்களின் பலவீனங்களைப் பற்றி கிண்டல் செய்வதில் பின்தங்குவதில்லை. எனவே, ஒவ்வொரு பலவீனமும் பெரியதோ, சிறியதோ அதனை ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.
சொந்த ரகசியம்
பெண்களால் வயிற்றில் உள்ள எதையும் ஜீரணிக்க முடியாது, அதாவது எதையும் நீண்ட நேரம் மறைத்து வைக்க முடியாது. எனவே அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லக்கூடாது. குறிப்பாக உங்களிடம் பற்றி ரகசியங்கள் பற்றி கூறவே என்று என்கிறார் சாணக்கியர். கணவன் தன் ரகசியங்கள், அவமானங்கள், பலவீனம் போன்றவற்றை மனைவியிடம் கூறக்கூடாது. பெண்களும் இந்த மூன்று விஷயங்களையும் உங்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம். எனவே, ஒருவர் தனது ரகசியங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
கடந்த கால தகவல்
சாணக்கியர் தனது சாஸ்திரத்தில் கணவன் தன் மனைவிக்கு தனது கடந்த காலத்தைப் பற்றி கூறக்கூடாது என்று தெளிவாக கூறியுள்ளார். கடந்த காலத்தை கடந்த காலத்தில் அப்படியே விட்டுவிட்டால் நல்லது. இல்லையெனில், சில நேரங்களில் கடந்த காலத்தின் விஷயங்கள் உங்களின் தற்போதைய வாழ்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ