வாஸ்து சாஸ்திரம் வாழ்க்கையின் இன்னல்கள் நீங்க பல தீர்வுகளைத் தருகிறது. வாஸ்து படி, வீட்டில் சில செடிகள் இருப்பது, பல வகையான குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் விலக உதவிடும். வாஸ்து படி, சில தாவரங்கள் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவற்றை வீட்டில் வைப்பதன் மூலமோ அல்லது நடுவதன் மூலமோ, நேர்மறை ஆற்றல் வீட்டில், பாயத் தொடங்குகிறது, மேலும் வீட்டில் செழிப்பும் வளம் நீக்கமற நிறைந்திருக்கும். இன்று நாம் அத்தகைய ஒரு செடி பற்றி அறிந்து கொள்வோம். அது ஸ்பைட பிளாண்ட் எனப்படும் சிலந்தி செடி. மணி பிளாண்டை விட  அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்களில் ஒன்று ஸ்பைடர் செடி. இது வீட்டிற்கு செல்வத்தை அள்ளித் தரும் பண காய்க்கும் மரம் எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் சிலந்தி செடியை  மணி பிளாண்ட் செடியுடன் சேர்த்து நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல் அகற்றப்பட்டு, பணமும் லாபமும் உருவாகத் தொடங்குகிறது. இத்துடன் வீட்டின் வாஸ்து தோஷங்களையும் நீக்குகிறது. இந்த செடியை தெற்கு மற்றும் மேற்கு திசையில் நட வேண்டாம் மற்றும் உலர விடாதீர்கள், இல்லையெனில் அது மோசமான பலனைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


நேர்மறை ஆற்றல்


சிலந்தி செடி பார்ப்பதற்கு சிறியது, ஆனால் மிகவும் கவர்ச்சிகரமானது. வீட்டில் எந்த இடத்திலும் எளிதாக வைத்து வளர்க்கலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் நேர்மறை ஆற்றலை உணர்கிறார். இந்த செடியை வீட்டில் அல்லது அலுவலகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். பணியிடத்தில் வைத்துக் கொள்வதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் அதிகரிக்கும். மறுபுறம், இதை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது மற்றும் குடும்பத்தில் அன்பு, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. வீட்டில் என்றென்றும் லட்சுமி கடாட்சம் இருக்கும்.


மேலும் படிக்க | ஆகஸ்ட் 18 முதல் 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்: செவ்வாய் செல்வம் தரும், வெற்றி வரும்


நோய்களை குணப்படுத்தும் ஸ்பைடர் செடி


சிலந்தி செடியை வீட்டிற்குள் கொண்டு வருவது மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது. மன அழுத்தம் மற்றும் விரக்தியை நீக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது. இதனுடன், இது இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்தும் பாதுகாக்கிறது. கூடுதலாக, இது வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதை சரியான இடத்தில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனையை கூட தவிர்க்கலாம்.


ஸ்பைடர் செடி வீட்டின் காற்றை தூய்மையாக வைத்திருக்கும்


வீட்டில் ஒரு ஸ்பைடர் செடி நடுவது காற்று சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது மற்றும் வீடு முழுவதும் காற்றை தூய்மையாக வைத்திருக்கும். இந்த செடி காற்றில் உள்ள 95 சதவீதத்திற்கும் அதிகமான நச்சுப் பொருட்களை நீக்குகிறது. எந்த சாதாரண தொட்டியிலும் வைத்துக்கொள்ளலாம். இச்செடியைப் பார்க்கும்போது தொட்டிக்குக் கீழே சிலந்திகள் தொங்குவது போல் தோன்றுவதால் இச்செடி சிலந்திச் செடி என்று அழைக்கப்படுகிறது.


வேலையில் தொழிலில் முன்னேற்றம் காணலாம்


வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண, உங்கள் பணியிடத்தில் சிலந்தி செடியுடன் மணி பிளாண்டையும் வைத்துக்கொள்ளலாம், இதைச் செய்வதன் மூலம் சுற்றிலும் நல்ல சூழ்நிலையும், வேலையில் நல்ல முன்னேற்றமும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த செடியை மணி பிளாண்டுடன் சேர்த்து வைத்துக்கொள்வதால் தொழில் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் வேலையில் உள்ள தடைகள் நீங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | வக்ரமடையும் புதன்... 10 நாட்களில் ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ