ராசிபலன் இன்று (18-12-2022): இந்த நாள் யாருக்கு எப்படி இருக்கும். காலையில் இன்றைய ராசிபலனைத் தெரிந்துக் கொண்டால், நாள் முழுவதும் திட்டமிட்டு நிம்மதியாக வாழலாம். சில ராசியினரின் உடல்நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றால், சில ராசிக்காரர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. இப்படி உங்களுடைய இன்றைய சாதக பாதகங்களை தெரிந்துக் கொண்டு செயல்படுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். 


அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்


ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவும் இந்த காலக்கட்டத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.. பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். 


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


மேலும் படிக்க | வார பலன் - மேஷம் முதல் கன்னி வரை; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!


மிதுனம்: இன்றைய நாள் முழுவதும் பிஸியாக இருக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். வேலை வாய்ப்புகள் அமையும். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம்


கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் நாள் இன்று. நிதி நிலை மேம்படும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. 


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு


சிம்மம்: இந்த ராசிக்காரர்களின் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். திடீர் பணவரவு உண்டு. வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்.  


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


கன்னி: இந்த ராசிக்காரர்கள் இன்று உறவுகளில் பிரிவை சந்திக்க நேரிடலாம். பணம் செலவழிப்பதை தவிர்க்கவும். சரியான நேரத்தில் விஷயங்களைச் செய்யுங்கள். 


அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு


மேலும் படிக்க | செயற்கை கருத்தரிப்பை கூறியிருக்கும் பாபா வாங்கா! 2023 ஆம் ஆண்டு குறித்து அவரின் கணிப்புகள்


துலாம்: இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளி உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.  


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை


விருச்சிகம்: எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். தற்செயலான நிதி ஆதாயம் உண்டாகும். அதிக செலவு செய்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு


தனுசு: இந்த ராசிக்காரர்கள் பணவரவால் ஆதாயம் அடைவார்கள். பிள்ளைகள் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. மனக் கவலைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நல்ல செய்திகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு


மகரம்: விவாதங்களையும் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நாள் முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். நெய் தீபம் ஏற்றுவது நல்லது.


அதிர்ஷ்ட நிறம்: நீலம்


கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு. ஊதியம் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், பணிச்சுமை அதிகரிக்கும்.  


அதிர்ஷ்ட நிறம்: ஊதா


மீனம்: இந்த ராசிக்காரர்களின் தொழில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தடைபட்ட பணிகள் நிறைவேறும். செய்யும் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


மேலும் படிக்க | சூரியன் - சனி பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! இவர்களுக்கு எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ