Astro Predictions: புதனின் அருளால் வெள்ளிக்கிழமையன்று வெற்றி பெறும் 4 ராசிகள்
Astro Predictions: நாளென்ன செய்யும் கோள் என்ன செய்யும் என்றாலும், இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரகங்களின் தாக்கமும் அனுக்கிரகமும் மனிதர்களின் வாழ்வின் நன்மை தீமைகளுக்கு அடிப்படையாகின்றன
புதுடெல்லி: ஆகஸ்ட் 21ம் தேதி ஞாயிறு அன்று புதன் பகவான், கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனார். மீண்டும் அவர், செப்டம்பர் 10ம் தேதி தன் சொந்த ராசியிலேயே வக்ர நிலை அடைகிறார். அதாவது பின்னோக்கி நகர்வார். அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கன்னி ராசியிலேயே இயல்பு நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ள புதன் பகவான் பலரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். புதனின் பார்வையில் அவர் வழங்கும் செப்டம்பர் இரண்டாம் தேதிக்கான ராசிபலன் இது...
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்களில் திடீர் திருப்பங்களால் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
மேலும் படிக்க | செப்டம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், மகிழ்ச்சி மழை பொழியும்
ரிஷபம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். உங்களின் மீதான வதந்தி நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
மிதுனம்: குழந்தைகளின் திறமைகளை புரிந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்கள், நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.
கடகம்: நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். சோர்வு விலகும் நாள்.
மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்
சிம்மம்: முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்ளும் வாய்ப்பு சிம்ம ராசி அன்பர்களுக்கு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய அனுபவத்தின் மூலம் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் ஏற்படும். தடைகள் குறையும் நாள்.
கன்னி: பயணங்களின் போது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம்: உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். செல்வாக்கு மேம்படும் நாள்.
விருச்சிகம்: பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது உங்களின் மீதான நம்பிக்கை மேம்படுத்தும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆக்கப்பூர்வமான நாள்.
தனுசு: மனதில் எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் குறையும் நாள்.
மேலும் படிக்க | இன்னும் 91 நாட்களில் குரு வக்ர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பண வரவு பொழியும்
மகரம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பணிவு வேண்டிய நாள்.
கும்பம்: தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நிறைவான நாள்.
மீனம்: வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படுவது நம்பிக்கையை மேம்படுத்தும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Planet Transits 2022: அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ