சிலர் நோயினால் கடும் அவதிப் படுவார்கள். பலவிதமான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பலனில்லாமல் இருக்கலாம். நோய் தீர மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக தேவை. எனினும், ஜோதிட சாஸ்திரப்படி ஒருவர் தனது ஜாதகம் தொடர்பான பரிகாரங்களை கிரகங்கள் மற்றும் ராசிகளுக்கு ஏற்ப எடுத்துக்கொண்டால் சிகிச்சையில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, சரியான நேரத்தில் பரிகாரங்கள் செய்வதால், பலன் அடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவுப்பழக்கத்தில் கவனக்குறைவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றத்துடன், பல்வேறு கிரக தோஷங்களும் சேர்ந்து கொண்டு, சில சமயங்களில் நோய் வாட்டி எடுக்கும். சத்தான உணவுகளை உட்கொண்டு, நம் வாழ்க்கை முறையை மேம்படுத்தினால், நமக்கு நோய்களில் இருந்து தப்பிக்கலாம். பழக்கவழக்கங்களில் ஏற்படுத்தும் மாற்றத்துடன், தொல்லை தரும் கிரகங்கள் மற்றும் வாஸ்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டால்,  மருத்துவ சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.


ஜோதிடம் பரிகாரங்கள்


வீட்டிலும், வெளியிலும் உள்ள சூழ்நிலைகள்தான் நம் நோய்களுக்குக் காரணம் ஆனால் ரகசிய எதிரியைப் பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. மருத்துவத்துடன் கூடிய பிரார்த்தனை எப்போதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்து பரிகாரங்கள் மற்றும் ஜோதிடம் பரிகாரங்கள் நன்மை பயக்கும்.


சில எளிய பரிகாரங்கள்


1. நம் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கும் போது சத்தம் எழுப்பினால், அது கெடு பலன்களை கொடுக்கும். அந்த சத்தமும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, கதவு இணைப்புகளில் எண்ணெயை ஊற்றி அவற்றின் சத்தத்தை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.


2. மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளானால், கண்டிப்பாக மருந்து சாப்பிட வேண்டும். அதோடு, சிறு மண் பாத்திரத்தில் தேனை நிரப்பி, மூடி வைத்து, கோதுமை அல்லது அரிசி மாவில் வாயை மூடி, ஏழு முறை உடம்பில் இருந்து இறக்கி, வெறிச்சோடிய இடத்திற்கு எடுத்துச் சென்று, புதைக்கவும். இது நிச்சயமாக ஆரோக்கிய நன்மைகளை தரும்.


மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் இடம் மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!


3. கால் மூட்டுவலி இருந்தால், ஜாதகத்தில் சனியின் நிலை நன்றாக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சனி பகவான் அருளைப் பெற சனிக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடலாம். ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்யலாம்.


4. இடுப்பு அல்லது முதுகு வலிக்கு கேது கிரக நிலை தான் காரணம். சுமார் எண்ணூறு கிராம் கறுப்பு வெள்ளை எள்ளை மூலஸ்தான தெய்வத்தின் பெயரில் ஆற்றிலோ குளத்திலோ விட்டால் முதுகு வலிக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.


5. தீராத நோய் தீர, நானூறு கிராம் தயிரில் உளுந்து கலந்து வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.


6. நோய்வாய்ப்பட்டவருக்கு, வடக்கு திசையில் அமர்ந்து மருந்து கொடுத்தால், மருந்து அதிக பலன் தரும், அதுமட்டுமின்றி, வடமேற்கு திசையில் மருந்தை வைக்க வேண்டும். 


7. தாய் தென்மேற்கு மூலையில் அமர்ந்து குழந்தைக்கு உணவளித்தால், குழந்தை நோய்களால் பாதிக்கப்படும், ஆனால் தாய் குழந்தைக்கு கிழக்கு நோக்கி உணவளித்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.


8. நோயாளியை தென்மேற்கு மூலையில் இருக்க வைத்தால், நோய் நீண்ட காலம் நீடிக்கும்,. ஆனால் அவரை வடமேற்கு அல்லது வடகிழக்கு மூலையில் இருக்க வைத்தால், அவர் விரைவாக நிவாரணம் பெறுவார்.


9. அவசர நிலை ஏதும்  இல்லை என்றால், சுவாதி, புனர்வசு, திருவோணம் அல்லது அவிட்ட நட்சத்திரங்களில் சிகிச்சையை தொடங்கினால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். பிறவி நக்ஷத்திரமாக இருக்கக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போன்று, ஞாயிறு, புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிகிச்சை தொடங்கினாலும் விரைவில் குணமடையும். 


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | வக்ரமடையும் புதன்... இந்த ராசிகளுக்கு பணவிரயம்... பலன்களும் பரிகாரங்களும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ