Astro Remedies & Black Turmeric: மஞ்சள் வகையில் அரிய வகையான கருமஞ்சள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.  நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் கருமஞ்சள், சற்று விலை அதிகம் தான் என்றாலும் வாழ்க்கையில் செல்வத்தினையும் வெற்றிகளைகளையும் அள்ளிக் கொடுக்கும் இது பல வகையான பரிகாரங்களுக்கு ஏற்றது.  இந்த கரு மஞ்சளை, மஞ்சள் இழைக்கும் கல்லில் நன்றாக இழைத்து நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு சென்றால் நாம் எதிர்பார்க்கும் பணம் உடனேயே கைக்கு கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கருமஞ்சள் காளிக்கும் மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் கருமஞ்சள்


கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் வெற்றி உங்களை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். வீட்டில் பண வரவுக்கு தடையே இருக்காது. செல்வம் கொழிக்கும்.  பணம் வாங்க வேண்டும், கடன் சம்பந்தமாக பேச வேண்டும் என்று வெளியில் போனாலும் இதை உடன் எடுத்து போனால் பணம் கிடைக்கும். வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடங்கள், பணப்பெட்டியில் வைக்கலாம்.


கணவன் மனைவி பிரச்சினையை தீர்க்கும் கருமஞ்சள்


கணவன் மனைவி பிரச்சினையை தீர்க்கவும் கருமஞ்சள் மிகவும் பலன் தரும். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி சதா சண்டை சச்சரவுடனே இருப்பார்கள். வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாகத்தான் இருக்கும்.  அவர்கள் கருப்பு மஞ்சளை வீட்டின் பூஜையறையில் வைத்து பூஜை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


எதிர்மறை சக்திகள் விலகி ஓடும்


கருப்பு மஞ்சள் காளி, பைரவர் உபாசனைக்கு பயன்படுத்தப்படுகிறது. செய்வினை கோளாறுகளை நீக்கும்.  எனவே எதிர்மறை சக்திகளை ஓட வைக்கும். வெற்றியைத் தேடித்தரும். வாழ்க்கையில் நமது நிம்மத்தியை குலைக்கும் எதிர்மறை சக்திகளை நிர்மூலமாக்கி விடும். தீய சக்திகளை அழிக்க, மஞ்சளை வீட்டின் பூஜையறையில் வைத்து பூஜை செய்து வரவும்.


தோஷம் போக்கும் கருப்பு மஞ்சள்


ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள், ராகுவினால் ஏற்படும் தோஷத்தையும் போக்கக் கூடியது.  இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும். ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருப்பு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.  சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக கூட இந்தக் கரு மஞ்சளானது  பயன்படுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ