கருமை நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள் காரகன் என கூறப்படுகிறார். இவர் நீதிக் கடவுள். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். சனியை போல் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. சனி பகவான் அருள் புரிய வேண்டும் என முடிவு செய்து விட்டால். அந்த ஜாதகர் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் செல்வங்களையும், அடைந்து சுகமான வாழ்க்கை வாழலாம். அப்படிப்பட்ட சனி பகவானின் அருளை பெற ஆஞ்சனேயரை வணங்குவது மிக்க பலனைத் தரும். வரும் சனி பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புகளை தாக்கங்களை தவிர்க்க இது சிறந்த வகையில் பலன் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கம்பர் ஆஞ்சனையரை போற்றிப் பாடுகையில், அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன், ஐம்புலன்களை வென்றவன், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவன், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவன், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவன் என போற்றுகிறார். இந்த கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். 


சனி தோஷம் நீங்க, அருகில் உள்ள ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும். அனுமனுக்கு பொரி, அவல், கடலை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம், சர்க்கரை போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.


ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட அனுமனை பூஜிப்பது சிறந்த பலனைத் தரும் என நம்பப்படுகிறது. சனியின் கோபத்தில் இருந்து விடுபட ஹனுமனை வழிப்பட்டால் போதும். அதோடு, சனிபகவானின் முன் எள் தீபம் ஏற்ற வழிபட்டு, தானம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனிபகவான் மனம் குளிர்ந்து அருளை அள்ளி வழங்குவார் என்பது நம்பிக்கை.


மேலும் படிக்க | 2023 புத்தாண்டு ராசிபலன், இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 


மேலும் ஹனுமனுக்கு வெற்றிலையில் மாலை கட்டி சாற்றினால் வாழ்க்கையின் தடைகள் அனைத்தும் நீங்கும். மேலும் ஹனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் என எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.


பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் வடை ஆகியவற்றை படைத்து வழிபடுதல் சிறப்பு. அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்வதும் நல்ல பலனைத் தரும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மீனத்தில் மாளவ்ய ராஜயோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமர்க்களமான புத்தாண்டு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ