இன்று சோபகிருது ஆண்டு, மாசி 17ம் நாள். இன்றைய நாள் நல்ல நாளாக மலரட்டும். இன்று என்ன நடக்கப் போகிறது என தெரிந்து கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் அது புத்திசாலித்தனமானதாக இருக்கும்... வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்குவோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் - (29-02-2024)


மேஷம் 


பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் தனவரவுகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.  


ரிஷபம் 
குடும்பத்தினரிடையே மனம் விட்டு பேசுவீர்கள். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும்.  


மிதுனம் 
முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.  


கடகம் 
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  


சிம்மம் 
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகன முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  


மேலும் படிக்க | சனி உதயத்தால் இந்த ராசிகளுக்கு சனி தோஷ நிவாரணம்: இனி ராஜயோகம் ஆரம்பம்


கன்னி 
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணியில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும்.


துலாம் 
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  


விருச்சிகம் 
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். 


தனுசு 
மனதளவில் உற்சாகம் பிறக்கும். தனுசு ராசிக்காரகளுக்கு பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மற்றவர்களின் மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். புதிய இடம் வாங்குவதற்கான வாய்ப்பு கைகூடிவரும்


மகரம் 
சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். 


கும்பம் 
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகான்களின் சந்திப்பு சிலருக்கு ஏற்படும். 


மீனம் 
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: பணம், புகழ், பதவி... அனைத்தும் இவர்கள் வசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ