அனைத்து இராசிகளும் மனிதர்களின்ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டவை. இன்றைய தினம் என்ன நடக்கப் போகிறது என்பதை ஜோதிட குறிப்புகள் மூலம் தெரிந்துக் கொண்டு நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும். வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை அறிந்து இந்த நாளைத் தொடங்கினால் நாள் நல்ல நாளாக மலரும்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று சோபகிருது சோபகிருது, பங்குனி 4ம் நாள் ராசி பலன்கள்... இன்றைய நாள் எப்படி இருக்கும்? வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா இல்லையா என்பதை தெரிந்துக் கொண்டு இன்றைய நாளைத் தொடங்கினால் என்றும் நல்ல நாளே...


மேஷ ராசிபலன்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனிதர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் நிதானமாக செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களால் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் சிந்தித்துச் செயல்படவும்.


ரிஷப ராசிபலன்


எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். கூட பணிபுரியும் ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடப்பது நல்லது. சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதுவிதமான எண்ணங்கள் உதிக்கும், காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். மனதில் நிம்மதியும் அதனால் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கும் நாள்.


மேலும் படிக்க | உதயமாகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு இனி அனைத்திலும் வெற்றி, அபரிமிதமான பண வரவு


மிதுன ராசிபலன்


நிர்வாகத்தில் மாறுதல்கள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்.  தனவரவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட காரியங்கள் எளிதில் முடியும். சவாலான பணிகளாக இருந்தாலும் அனைவரின் ஆதரவையும் பெற்று சுலபமாக முடிப்பீர்கள். குடும்ப விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும், கவனமாக இல்லாவிட்டால் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போகலாம்


கடக ராசிபலன்


எதிர்பாராத தனவரவு குதூகலத்தை ஏற்படுத்தும், அத்துடன் சேமிப்பும் மேம்படும். கிரகங்களின் இன்றைய நிலையால், வீடு, மனை விற்க நினைப்பவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். தொழிலில் லாபம் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அனுபவங்களின் அடிப்படையில் வாழ்க்கையின் கோணம் மாறுவதை புரிந்துக் கொள்வீர்கள்.


சிம்ம ராசிபலன்


விமர்சன பேச்சுக்களால் உங்கள் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தள்ளிப்போன காரியங்களை சுலபமாக முடிப்பீர்கள். சவாலான பணிகளையும் சிரமமின்றி முடிக்கும் உற்சாகமான நாள் இது.


கன்னி ராசிபலன்


தொழில், வியாபாரத்தில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். செலவுகளை குறைத்துக் கொண்டால் நிம்மதி நிச்சயம். திடீர் பயணங்கள் ஏற்படுவது மனதில் உலைச்சலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தாலும் மனதில் சோர்வு உண்டாகும்.


துலாம் ராசிபலன்


தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய வழக்கமான அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவுடன் பல விஷயங்களை முடிக்கலாம் என்ற தெம்பு பிறக்கும்.


மேலும் படிக்க | பணம் வந்து கொட்டோ கொட்டனும்னு கொட்டனுமா? இந்த விஷயங்களை செய்துப் பாருங்க...


விருச்சிக ராசிபலன்


மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைப்பது முக்கியமானதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் அனுசரணையான போக்கு இருக்கும்.  


 தனுசு ராசிபலன்


இன்று கிடைக்கும் சில வாய்ப்புகள் உத்தியோகத்தில் பிரிப்பை ஏற்படுத்தும். வேலையில் மற்றவர்களை பொறுமையாக கையாளவும். பதற்றமின்றி செயல்படுவது நல்லது. பயணங்களில் கவனம் அவசியம். பல்வேறுவிதமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டாலும், இறுதியில் தெளிவு பிறக்கும்.


மகர ராசிபலன்


எடுத்த பணிகளில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின்  உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும், ஆனால் வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


கும்ப ராசிபலன்


சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும், இது புதிய அனுபவங்களைக் கொடுக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான தெளிவு பிறக்கும். அனுபவ அறிவு அவசியம் என்பதை உணர்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.


மீனம் ராசிபலன்


ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு பயனுள்ள பணியை செய்கிறோம் என்ற எண்ணம் மேம்படும். குடும்பத்தில் நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் மற்றவர்கள் உங்களை மதிக்கும் நிலை உருவாகும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.  


மேலும் படிக்க |64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ