இந்த ராசிகளுக்கு வீண் செலவு, பணத் தட்டுப்பாடு இருக்கும், செவ்வாய் வெச்சி செய்வார்
Mars Transit 2023: வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் கிரகம் ஜூலை 1 நீச்சம் அடைகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்று ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் கஷ்டங்களை உண்டாக்கப் போகிறது. இந்த 3 ராசிக்காரர்கள் பணம் மற்றும் ஆரோக்கியம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் கிரகப் பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது நகர்ந்து, நீச்சம் மற்றும் உச்சம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அதன் தாக்கம் அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெளிவாகத் தெரியும். தற்போது செவ்வாய் கடகத்தில் அமர்ந்துள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில், எந்த ஒரு கிரகத்தின் நீச்சம் அசுபமாக கருதப்படுகிறது. அந்த வகையில் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் கடகத்தில் சஞ்சரிப்பார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். இனி 45 நாட்களுக்கு கடகத்தில் நீசமடைந்து தனது சக்தியை இழந்து காணப்படுவார். அத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்கள் மோசமான முடிவுகளைப் பெறுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், மூன்று ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் - ஜோதிடத்தின் படி, இந்த நேரத்தில் செவ்வாய் நீச்சம் அடைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் நீசமாக இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தொண்டை மற்றும் மார்பு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி தலைவலி, தசை சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் இந்த நேரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | ஜூலையில் 5 அபூர்வ யோகங்கள்! இனி ‘இந்த’ ராசிகளின் காட்டில் ‘அதிர்ஷ்ட மழை’ கொட்டும்!
மிதுனம் - செவ்வாயின் நிச்ச நிலை இந்த ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆவார். மேலும் ஏகாதசி வீட்டின் அதிபதி. இந்த நேரத்தில் நீங்கள் விவாதத்தையும் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுபினர்களுடன் சண்டை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் முதலீடு செய்வதையும் தவிர்க்கவும்.
கன்னி - செவ்வாயின் நீச்ச நிலை கன்னி ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும். செவ்வாய் உங்கள் சுப ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். அதேசமயம், மூன்றாவது மற்றும் எட்டாவது வீட்டிற்கு அதிபதி ஆவார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கால்கள் மற்றும் தொடைகளில் வலி ஏற்படலாம். அதே நேரத்தில், காதுகள் தொடர்பான பிரச்சனைகளும் இந்த நேரத்தில் உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில், சிக்கல் ஏற்படலாம்.
செவ்வாய் நீச்சத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்
செவ்வாய் நீச்சம் அடைவதால் அதிகம் பயப்படக்கூடிய ரத்த இழப்பை தரக்கூடிய விபத்து நடக்காமல் தடுக்க நாமே முன்வந்து ரத்த தானம் செய்வது நல்லது என்பதாலேயே ஜோதிடத்தில் இந்த பரிகாரம் பரிந்துரைக்கப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வக்ர நிலையில் சனி, ராகு, கேது: 3 ராசிகளுக்கு பொற்காலம்.. திகட்ட திகட்ட மகிழ்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ