புதைந்திருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. சனியால் இந்த ரசிகளுக்கு டாப் டக்கர்
இந்த நேரத்தில் சனி பிற்போக்கான நிலையில் பயணம் செய்கிறார் மற்றும் நவம்பர் 4, 2023 வரை பின்னோக்கி நகர்கிறார். மீண்டும் ஆகஸ்ட் 15, 2023 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைகிறார்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2023: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் இயக்கத்தை மாற்றுகிறது. கிரகங்களின் பலம் அவ்வப்போது வலுவிழந்து வலுவடையும். ஜோதிடத்தில் சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறது. தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த நேரத்தில் சனி பகவான் வக்ர நிலையில் (Shani Vakra Peyarchi 2023) பயணித்து வருகிறார் மற்றும் நவம்பர் 4, 2023 வரை இதே நிலையில் தான் பயணிப்பார். இதனிடையே சனி பகவானின் எழுச்சி சில ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே சனியின் எழுச்சி எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பலன் அனைத்தும் சனி பகவானின் அருளால் (Shani Gochar 2023) உடனடியாக கிடைக்கும்
மேஷ ராசி (Aries Zodiac Sign) : மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் / பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மரியாதை கூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்
ரிஷப ராசி (Taurus Zodiac Sign) : ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் மற்றும் சனி-சுக்கிரன் (Shani - Shukran) நட்பு கிரகமாக கருதப்படுகிறது. இந்த காரணத்திற்காக, சனி தேவன் எப்போதும் ரிஷப ராசிக்காரர்களிடம் அன்பாக இருப்பார். இந்த நேரத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றி பெறும். திடீர் பண ஆதாயம் கூடும். நிறுத்தப்பட்ட வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி (Gemini Zodiac Sign) : மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் (Shani Dev) பல நன்மைகளைத் தரப் போகிறார். சனி மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைப்பார். வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் கனவு நிறைவேறும். அதேபோல் உங்களின் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் துறையில் உங்கள் பணி உடனடியாக பாராட்டப்படும். காதல் திருமணத்தில் சிரமங்கள் ஏற்படலாம். பழைய கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
துலாம் ராசி (Libra Zodiac Sign) : சனிபகவானின் எழுச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் அமையும். சனிபகவானின் அருளால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சொத்து அல்லது வாகனம் உடனடியாக வாங்கலாம். திடீரென்று எங்கிருந்தாவது பணம் மழை கொட்டோ கொட்டுனு கொட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் துலாம் ராசிக்காரர்களின் மரியாதையும் கௌரவமும் பெறலாம். உறவினர்களுடனான உயரவு சிறப்பாக இருக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ