மங்கள மகா சிவராத்திரி நாளை.. இந்த ராசிகளுக்கு சனியால் கோடீஸ்வர யோகம்
Mahashivratri 2024 Sani Lucky Zodiac Signs : நாளை மகாசிவராத்திரி தினம். இந்த தினத்தில் சனியின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மகா சிவராத்திரி வழிப்பாடு 20204 : மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மகாசிவராத்திரி நாளை அதாவது மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த அற்புத தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதேபோல் ஏழரை சனி நடக்கும் மகரம், கும்பம், மீனம், அஷ்டம சனி நடக்கும் கடகம் உள்ளிட்ட ராசிகள் இந்த சிவராத்திரியில் சிவனை வழிப்பட்டால் சனியின் நல்லருளை பெறலாம். எந்தெந்த ராசி எப்படி வழிப்பட வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
மேஷம்: மேஷ ராசியினர் சிவராத்திரி (Mahashivratri 2024) அன்று சிவபெருமானுக்கு கரும்புச் சாறு மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்தால் சனியின் அருளைப் பெறலாம்.
ரிஷபம்: சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் வெள்ளை நிற பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், நற்பலனை பெறலாம்.
மிதுனம்: புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசியினர் சிவராத்திரியில் சிவனுக்கு (Lord Shia) வில்வ இலையால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
கடகம்: அஷ்டம சனியால் அவதிப்படும் கடக ராசியினர் இந்த சிவராத்திரியில் சிவனுக்கு பால் அபிஷேகம், அரளிப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிம்மம்: சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் வெல்லம் கலந்த பால் அபிஷேகம் செய்யவும்.
கன்னி: புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியினர் சிவலிங்கத்திற்கு ஊமத்தங்காய் பூ வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
துலாம்: சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசியினர் சிவராத்திரியில் சிவலிங்கத்திற்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினர் மகா சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு தேன் அல்லது சர்க்கரை கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
தனுசு: குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினருக்கு மகா சிவராத்திரி தினத்தில் சிவனுக்கு பால் அபிஷேகத்துடன் “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மகரம்: ஏழரை சனியால அவதிப்படும் மகர ராசியினர் நாளை நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைக்கும்.
கும்பம்: ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கக்கூடிய கும்ப ராசியினர் இந்த சிவராத்திரியில், சிவனுக்கு கருப்பு எள் கொண்டு அர்ச்சனை செய்யவும்.
மீனம்: மீன ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் சனியின் தோஷம் குறைய பச்சைப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ