ஜூலை மாதத்தில், முக்கியமான கிரகங்களான சனி மற்றும் சூரியன் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றியுள்ளனர். சனிப்பெயர்ச்சியும் சூரியப் பெயர்ச்சியும் வெறும் 5 நாட்களில் நடந்தன. ஜோதிடத்தில், இந்த இரண்டு கிரகங்களும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்களின் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் தற்போது சனி தனது ராசியை மாற்றி மகர ராசியில் பிரவேசித்துள்ளார். அதேபோல் சூரியனும் கடக ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த நிலை சமசப்தம யோகத்தை உண்டாக்குகிறது. இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே காண்போம்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 


இந்த நான்கு ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை நன்மைகளைப் பெறுவார்கள். சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். முதலீடு செய்பவர்களும் பலன் அடைவார்கள். சேமிக்க இது ஒரு நல்ல நேரம்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகம் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். குறிப்பாக அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். அதே நேரத்தில், வேலை தேடுபவர்கள் தங்கள் விருப்பப்படி வேலை பெறலாம்.


துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியில் வெற்றியும் மரியாதையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். இந்த நேரம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள்.


மீனம் - சனி மற்றும் சூரியன் ஸ்தானத்தால் உருவாகும் சமசப்தம யோகம் மீன ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் தரும். தொழிலில் வெற்றி பெறுவார்கள். புதியவர்களுக்கு வேலை கிடைக்கும். சில நல்ல செய்திகளையும் காணலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ