Guru Peyarchi Palangal: ஜோதிடத்தின் படி, குரு பகவானுக்கு சிறப்பு இடம் உண்டு. குருவின் அருள் இருந்தால் அதிர்ஷ்ட மழை கொட்டும் என்பது ஐதீகம். அதேபோல் குரு வியாழன் கிரகமானது அறிவு, ஆசிரியர், கல்வி, மதப்பணி, செல்வம், செழிப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அந்த வகையில் தற்போது வரும் மே 1 ஆம் தேதி குரு பகவான் வியாழன் தனது ராசியை மேஷத்தில் இருந்து மாற்றி ரிஷபத்தில் நுழைகிறார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த நிகழ்வு, மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசிகளை கிடைக்கக்கூடும். எனவே இந்த குரு பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படிப் பட்ட பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் நிலவும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்க முயற்சிக்கவும். கல்வியால் மகிழ்ச்சியான பலனைத் தரும். உயர்கல்விக்கு வெளியூர் வாய்ப்பை பெறலாம்.


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அறிவுசார் வேலை மூலம் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சிறுசிறு சிரமங்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்தாலும் மனதில் சில எண்ணங்கள் ஏற்றத் தாழ்வுகளை தரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சியும் லட்சுமி நாராயண யோகமும்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். மனம் கலங்கிக்கொண்டே இருக்கும். மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். நண்பரின் உதவியால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு முழு நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அமையும். வருமானம் கூடும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டவும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் நிலவும். வியாபாரத்தில் தற்போது மந்தநிலை காணலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரம் நல்ல நிலைக்கு செல்லும். மூத்த சகோதர சகோதரிகளிடமிருந்து சில நிதி உதவிகளைப் பெறலாம்.


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையின்மையை உணரலாம். பெரிய அரசியல்வாதியை சந்திக்கலாம். உத்தியோகத்தில் நல்ல வேலை வாய்ப்பு சூழல் அதிகரிக்கும். இடமாற்றமும் ஏற்படலாம். வாகன வசதி கூடலாம்.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு மனதில் சலனம் ஏற்படும். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மனதில் ஏற்ற தாழ்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம். 


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு மனம் உறுதியுடன் இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். குடும்பத்துடன் சில மத ஸ்தலத்திற்கு செல்லலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறலாம். மரியாதை கூடும்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும். கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வருமானம் அதிகரிக்கும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். உரையாடலில் பொறுமை வேண்டும். கோபம் அதிகமாக வரலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வருமானம் குறையலாம்.


மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு மனதில் மகிழ்ச்சி நிலவும், மனதில் சில ஏற்ற தாழ்வுகள் சூழல் ஏற்படலாம். வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பணம் திரும்பப் பெறப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ