Weekly Horoscope: இந்த 4 ராசிக்காரர்கள் ஜூலை 10 வரை கவனமா இருக்கணும்
Weekly Horoscope 2022: இந்த வாரம் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை மாற்றத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.
ஜூலை முதல் வாரம் தொடங்கிவிட்டது. புதிய வாரத்தில் பல கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையில் மாற்றம் ஏற்படும். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஜோதிடர்களின் கூற்றுப்படி, பல ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இந்த வார ராசிபலன்களை தெரிந்து கொள்ளுங்கள்-
மேஷம்- இந்த வாரம் உங்களின் பணி நடை மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். சட்ட விஷயங்களில் வெற்றி பெறலாம்.
மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர நிலையில் நுழையும் புதன்; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களின் பழைய வேலைகள் இந்த வாரம் முடியும். கௌரவம் உயரும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வீட்டில் எந்த சுப காரியமும் நடக்கலாம். உங்கள் பணி பாராட்டப்படும்.
மிதுனம்- இந்த வாரம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உறவுகளில் உள்ள தவறான புரிதல்களை நீக்க முயற்சி செய்யுங்கள். ஜூலை 07 க்குப் பிறகு, பயணங்கள் மேற்கொள்வீர்கள். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும்.
கடகம் - இந்த வாரம் உங்கள் கௌரவம் பாதிக்கப்படலாம். உங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். இருப்பினும், சக ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தால் மன உளைச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்- சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருள் இன்பம் கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து தகராறு தீரும் அறிகுறிகள் தென்படும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பழைய தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு மன நிம்மதி உண்டாகும். இந்த வாரம் உங்கள் வேலையின் சுமையை வேறு ஒருவருக்கு சுமத்த வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.
துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கூடும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்- உத்யோகத்தில் கடந்த வாரம் இருந்த நிலையே இருக்கும். இந்த வாரம் கடின உழைப்புக்கு குறைந்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்களின் மனம் இந்த வாரம் இலக்கில் இருந்து விலகலாம். இந்த வாரம் உங்களுக்கு பணிச்சுமை இருக்கலாம். தொழிலதிபர்கள் கூட்டுத் தொழிலில் வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
மகரம் - மகரம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். விரும்பிய பலன்கள் இல்லாததால் மனம் கலங்கலாம். முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
கும்பம்- கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில், பணியிடத்தில் ஒரு சிறப்புப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வேலைப் பிரச்சனைகள் தீரும்.
மீனம்- மீன ராசிக்காரர்கள் தங்கள் வேலை செய்யும் பாணியை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். புதிய இடத்தில் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR