Budh Margi 2023: ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல்தொடர்பு, கலை ஆகியவற்றைக் கொடுக்கிறது என நம்பப்படுகிறது. அதே போல் செல்வம் மற்றும் வணிகத்திற்கும் இது ஒரு காரணியாக உள்ளது. ஜாதகத்தில் புதன் சுபமாக இருந்தால், அந்த நபர் பெரிய தொழிலதிபராக மாறுவார். அவர் பேசும் கலையில் வல்லவராகவும் திகழ்வார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது புத்திசாலித்தனத்தால், ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்கிறார். வரும் மே 15ஆம் தேதி அன்று, புதன் கிரகம் பெயர்ச்சியாகிறது. தற்போது, புதன் பின்னோக்கி நகரும் நிலையில், மே 15ஆம் தேதியில் இருந்து அது மேஷத்தில் நேராக நகரும். சில ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். 


புதன் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும்.


மேஷம்


உங்கள் அறிவு அதிகரிக்கும். இந்த நேரம் வணிகத்திற்கு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நன்மை தரும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், திருமணம் செய்ய இது சரியான நேரமாகும்.


மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை பரிகாரங்கள்..! சூரிய பகவானின் அருளால் செல்வம் கிடைக்கும்..!


ரிஷபம்


புதன் ரிஷப ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான பலன்களை தருவார். புதிய வீடு வாங்கலாம் அல்லது பழைய வீட்டில் புனரமைப்பு செய்யலாம். உழைக்கும் மக்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் மதிப்பையும், பாராட்டையும் தேடித் தரும். உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வீர்கள், மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு அதிகரிக்கும்.


கன்னி


உங்களின் வியாபாரம் எங்கும் பரவும். உங்கள் வணிக விரிவாக்கத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.


தனுசு


புதனின் நேரடி சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு கௌரவம் தரும். உங்கள் உயர் பதவியில் அமர்ந்திருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும், இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும். எழுத்து, ஊடகத்துறையில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | குரு உதயம்: இந்த யோகத்தால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ