ராகு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... வெற்றி மேல் வெற்றி குவியும்
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சியின் தாக்ககும் அனைத்து கிரகங்களிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை கொண்டு வரும்.
ராகு பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விளைவு சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சிலருக்கு தீய பலன்களையும் அளிக்கும்.
அனைத்து கிரங்களையும் போல நிழல் கிரங்களான ராகுவும் கேதுவும் 18 மாதங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகின்றன. இவை எப்போதும் வக்ர நிலையில் இயங்குகின்றன. தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். அவர் 30 அக்டோபர் 2023 அன்று மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தின் அதிபதி கிரகம் வியாழன். ராகு அக்டோபர் 30 மதியம் வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு பெயர்ச்சியின் தாக்ககும் அனைத்து கிரகங்களிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான நற்பலன்களை கொண்டு வரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசி (Aries)
திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இதனுடன், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். இது தவிர குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
மிதுன ராசி (Gemini)
ராகுவின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் 10ம் வீட்டை பாதிக்கும். இதனால் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ராகு உங்கள் மீது நல்ல செல்வாக்கு செலுத்துவார். இந்த நேரத்தில், நிதி ஆதாயம் பெரும் வாய்ப்பு இருக்கும். சமுதாயத்தில் உங்கள் கௌரவம் உயரும், அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். அனைத்து விததமான பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.
கன்னி ராசி (Virgo)
மீன ராசியில் ராகு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், எதிர்பாராத நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் இந்த நேரத்தில் பெறக்கூடும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள், கூட்டாண்மையில் வேலை செய்துகொண்டிருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | 100 ஆண்டுக்குப் பிறகு அதிசய யோகம்.. இந்த ராசிகளுக்கு உச்ச அதிர்ஷ்டம், பண மழை
மகர ராசி (Capricorn)
மகர ராசிக்காரர்களுக்கும் ராகுவின் ராசி மாற்றம் நன்மை தரும். நம்பிக்கையும் சாகசமும் வளரும். வேலையில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை இது நல்ல நேரமாக இருக்கும். முக்கியமான காரியங்களில் வெற்றி கிட்டும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும், மரியாதை அதிகரிக்கும்.
மீன ராசி (Pisces)
இந்த லக்னத்தில் ராகு நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு ராகு சிறப்பான பலன்களைத் தருவார். மீன ராசியில் ராகுவின் பிரவேசம் சாதகமாக அமையும். மீன ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். நிலம் தொடர்பான விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கிரகங்களின் அபூர்வ நிகழ்வு, சனி புதனால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ