Budhan Nakshatra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர, கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவை அனைத்திலும் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும், சில ராசிகளுக்கு சங்கடமான பலன்களும் ஏற்படுகின்றன. 


இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு தீபாவளியில் கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். நவம்பர் 1 ஆம் தேதி, புதன் சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மிதுனம் (Gemini)


புதனின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்கு நல்ல செய்திகளை அளிக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையிலான உறவு வலுப்பெறும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மேலும், இந்த நேரம் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 


மேலும் படிக்க | 100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் அபூர்வயோகம்... அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 6 ராசிகள்


கன்னி (Virgo)


கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் மிகவும் சாதகமான ஒரு மாற்றமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணியால் மேலதிகாரிகள்  மகிழ்ச்சி அடைவார்கள். தொழிலதிபர்களுக்கும் நேரம் நன்றாக இருக்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். 


துலாம் (Libra)


துலாம் ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி விசேஷ பலன்களை அளிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Dhanteras 2024: தந்தேரஸ் பண்டிகையில் இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ