கடகத்திற்கு வரும் புதன்... இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் தூள் பறக்கும் - செல்வம் செழிக்கும்!
Mercury Transit 2023: கடக ராசியில் புதன் பெயர்ச்சியடைய உள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு சாதக பலன்களை அடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
Mercury Transit 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசன் புதனின் பெயர்ச்சி செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புதன் வரும் ஜூலை 8ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் நுழைய உள்ளது.
கடகத்தில் புதன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். எந்த பெரிய வேலையையும் முடிக்க முடியும். ஜூலை 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புதன் கடக ராசிக்குள் நுழைகிறார். புதன் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பலன்களைத் தரும்:
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு திடீரென்று நிறைய பணம் கிடைக்கும். உங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். துணையுடன் நன்றாக இருப்பார்கள். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி:
புதனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்குப் போதிய பண வரவைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். எந்த பெரிய ஆசையும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
துலாம்:
புதன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்குப் புதிய வேலையைத் தரும். பணமுடன் பதவியும் பெறுவீர்கள். அதே நேரத்தில், தற்போதைய வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு, இது நல்ல பலனைத் தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் பல வகையில் நன்மைகளை தரும். புது மக்களை சந்தியுங்கள். அவர்கள் எதிர்காலத்தில் பயனடைவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நன்றாகப் பழகுவீர்கள். பல மூலங்களிலிருந்து பணம் வருவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களின் வாழ்வில் புதன் பெயர்ச்சி பொன்னான நாட்களைத் தொடங்கும். உங்கள் ஆற்றல் தொடர்ந்து அதிகரிக்கும். நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். புதிய தொழிலில் முயற்சி செய்யலாம். திருமணம் நிச்சயிக்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காணலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வக்ர சனி இந்த 3 ராசிகளின் பொருளாதார நிலை மேம்படும்