சனியின் வக்ர நிலை, இந்த ராசிகளுக்கு சனியின் நேரடி அருள் கிடைக்கும்
Shani Dev, Shani Upay: சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அதன்படி சனி பகவான் நீண்ட காலமாக வக்ர நிலையில் இருக்கிறார். தற்போது அவர் வக்ர நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் எந்த ராசிக்காரர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
இந்து மதத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப பலன்களை வழங்குகிறார் சனி பகவான். அதனால்தான் இவர்களை கர்மா கொடுப்பவர்கள் என்றும் அழைப்பர். அதேபோல் யார் மீது சனி பகவானின் தீய பார்வை இருக்கிறதோ அவருடைய வாழ்க்கை நரகமாகிவிடும் என்பது ஐதீகம். ஜோதிட சாஸ்திரத்தின்படி சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் வரும் 23 அக்டோபர் 2022 அன்று மார்கியாகப் போகிறார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார்.
மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. சனி பகவான் சிறப்பு அருளால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூடிய கதவுகள் திறக்கப்படுகின்றன. சனியின் அருளால் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மேலும் படிக்க | சூரியன் அருளால் அடுத்த 13 நாட்கள் இந்த ராசிகளுக்கு பொன்னான நேரமாக ஜொலிக்கும்
சனியின் பாதையில் இருப்பது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும்:-
மேஷம்
மகர ராசியில் சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்கு நல்ல பலனை தரும். சனியின் அருள் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் வெற்றியைத் தேடித்தரும். இந்தக் காலத்தில் என்ன வேலை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். சனிபகவானின் அருளால், விரைவில் உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கும். பங்குச் சந்தையில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். சனிபகவானின் அருளால் வீட்டில் அமைதி நிலவும். கடின உழைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
ஜோதிட சாஸ்திரப்படி சனிபகவான் தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார் . தனுசு ராசிக்காரர்களுக்கு அதன் பலன் கிடைக்கும். சனிபகவானின் அருளால் தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை திரும்ப பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபமும், உத்தியோகத்தில் முன்னேற்றமும் உண்டாகும். எங்கிருந்தோ திடீரென்று பணம் வர வாய்ப்பு உண்டு.
இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் தசையில் இருந்து விடுதலை கிடைக்கும்:-
* சனி பகவான் கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்.
* அதேபோல் மிதுனம், துலாம் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | செப்டெம்பர் 5 முதல் இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ