சனி வக்ர நிவர்த்தி, சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இது சுப பலன்களையும் சில ராசிகளில் அசுப பலன்களையும் ஏற்படுத்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளிக்கு முன்னர் அப்படி ஒரு கிரக மாற்றம் நிகழவுள்ளது. சனி மற்றும் சுக்கிரன் கிரகங்களில் மாற்றம் ஏற்படவுள்ளது. சுக்கிரன் கிரகம் செல்வம், ஆடம்பரம், உலக இன்பம், மகிழ்ச்சி மற்றும் அன்புக்கு காரணி கிரகமாக உள்ளது. சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கின்றார். 


சுக்கிரன் மற்றும் சனியின் அசுப பலன்கள் வாழ்க்கையை கஷ்டங்கள் மற்றும் வறுமையால் நிரப்புகின்றன. ஆனால் இவற்றின் சுப பலன்கள் பல வித நற்பலன்களை அள்ளித்தருகின்றன. நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் சனி பகவான் மற்றும் சுக்கிரன் தங்கள் நிலைகளை மாற்றவுள்ளன. நவம்பர் 3-ம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். அதேசமயம் சுக்கிரன் பெயர்ச்சியின் அடுத்த நாளான 4 நவம்பர் 2023 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி மற்றும் சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு இது அபரிமிதமான நற்பலன்களை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் ஆரம்பம்


மேஷ ராசி (Aries): 


மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இவர்களுக்கு அதிகப்படியான பண வரவு இருக்கும். செய்யும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வாழ்க்கையில் பல இனிமையான மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும்.


மேலும் படிக்க | 2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்


ரிஷப ராசி (Taurus):


ரிஷப ராசிக்காரர்கள் தீபாவளிக்கு முன் லட்சுமி அன்னையின் அபரிமிதமான அருளைப் பெறுவார்கள். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கடின உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. இந்த காலத்தில் பொருளாதார நிலை வலுப்பெறும். சட்ட சிக்கல்களில் மாட்டி இருந்தால், இந்த நேரத்தில் சாதகமான சட்ட முடிவு வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். 


மிதுன ராசி (Gemini): 


மிதுன ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு முன் சனி பகவான் மற்றும் சுக்கிரனின் மாற்றத்தால் பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு பலன் தரும். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். முதலீட்டிலும் லாபம் அடைவீர்கள். இது தவிர சனிபகவானின் அருளால் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 


மகர ராசி (Capricorn)


தீபாவளிக்கு முன் சுக்கிரன் மற்றும் சனியின் மாற்றத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களை பெறவுள்ளனர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை கூடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைன்யுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி உச்சம் பெறுகிறார்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ