புதன் பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு கிரகம் அதன் ராசியை அல்லது இயக்கத்தை மாற்றுகிறது. கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்கங்களும் உலகத்தையும் மனித குலத்தையும் பாதிக்கின்றன. புதன் கிரகம் அனைத்து கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களைப் போல, புதனின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் கிரகம் பிப்ரவரி மாதம் சனிபகவான் ராசியான மகர ராசியில் பிரவேசிக்கவுள்ளது. புதன் பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு 7.38 மணிக்கு தனது ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன. புதனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


மேஷம்


மேஷ ராசியின் பத்தாம் வீட்டில் புதன் கிரகம் சஞ்சாரம் செய்வார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பணி இடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


மேலும் படிக்க | கும்பத்தில் சனி அஸ்தமனம், இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு புதன் கிரகம் நல்ல செய்திகளையும் மகிழ்ச்சி மழையையும் கொண்டு வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் ஒன்பதாம் வீட்டில் நுழைவார். அதிர்ஷ்டத்தின் ஆதரவால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது மீண்டும் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் வணிகம் தொடர்பான பயணத்தை மேற்கொள்ளலாம். இது லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.


கும்பம்


கிரகங்களின் அதிபதியான புதன் கும்ப ராசிக்கு 12வது வீட்டில் நுழைவார். இது புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும். இது பொருளாதார நிலைமையை வலுப்படுத்த உதவும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும்.


துலாம்


புதன் மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மிளிரும். இந்த ராசியின் ஜாதகத்தில் நான்காவது வீட்டில் புதன் சஞ்சரிப்பார். இந்த காலத்தில் வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டும் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பசந்த பஞ்சமி 2023: மேஷம் முதல் மீனம் வரை...இதை செய்தால் மங்களம் உண்டாகும்...! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ