சனி பகவானின் அருளால் ‘இந்த’ ராசிகளுக்கு 2024 புத்தாண்டில் ராஜயோகம் காத்திருக்கு..!!
Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ள நிலையில், இதன பலனை 2024அம் ஆண்டில் அனுபவிக்க போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சனி வக்ர நிவர்த்தி 2023: ஜோதிடத்தின் படி, கர்மாவிற்கு ஏற்ற பலன்களை வழங்குபவரும் நீதி வழங்குபவருமான சனி தேவன் நவம்பர் 4 ஆம் தேதி தனது ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தேவன் கும்ப ராசிக்கு வந்துள்ளார். அதேசமயம் 2025-ம் ஆண்டு வரை சனி தேவன் கும்பத்தில் இருப்பார். இப்படிப்பட்ட நிலையில் சனி பகவான் வக்ர நிவர்த்தி இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு சனிபகவானின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயமும், அதிர்ஷ்டமும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த ராசிக்காரர்களின் செல்வ வளம் கூடும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
கும்ப ராசி
கும்ப ராசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு மங்களகரமானதாகவும் பலன்களை அள்ளி வழங்ககூடியதாகவும் இருக்கும். ஏனெனில் சனிபகவான் கும்ப ராசிக்கு அதிபதி. மேலும், அவர் உங்கள் ராசிக்கு அதிபதியான வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை கவர்ச்சிகரமானதாக இருக்கும். எல்லா வேலைகளிலும் லாபம் இருக்கும் மற்றும் உங்கள் தடைபட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கலாம். நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். அதே நேரத்தில், சனி தேவன் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஷஷ ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். எனவே, இந்த நேரத்தில், நீங்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாகனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் தொழில், வேலையிலிருந்து பெரும் பயனடையலாம். தனிபட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்
ரிஷப ராசி
2024 ஆம் ஆண்டு ரிஷப ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். சனிபகவான் உங்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால், வெற்றிகளுக்கு குறைவு இருக்காது. இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம். மேலும், தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பதவி மற்றும் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் வணிகத்தில் சில புதிய அங்கீகாரங்களையும் பெறலாம். இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அதுமட்டுமின்றி, சனி தேவன் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஷஷ ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். இதனால் வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
மிதுனம் ராசி
2024 ஆம் ஆண்டு மிதுன ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். சனிபகவான் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டை நோக்கி நகர்ந்திருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். மேலும், அவர் 2025-ம் ஆண்டு வரை உங்களுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், பணம் சம்பாதிக்க பல சிறந்த வாய்ப்புகள் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணம் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் வாகனம் மற்றும் சொத்து வாங்குவது பற்றி சிந்திக்கலாம். மேலும், மார்ச் மாதத்திற்குப் பிறகு, நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.