இந்த ராசிகளுக்கு அடுத்த 18 நாட்கள் அட்டகாசமாய் இருக்கும்: 3 கிரகங்களின் அருள் கிடைக்கும்
Grah Gochar: மே மாதம் நடக்கவுள்ள கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
மே மாத கிரக மாற்றங்கள், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றமும், இயக்க மாற்றமும், உச்சம் பெறும், நீச்சம் பெறும் நிலைகளும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். மே மாதத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. அவற்றின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 15 ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி ரிஷபம் ராசிக்குள் நுழைவார். அதே நாளில், அதாவது மே 15 ஆம் தேதி அன்றுதான் புதன் கிரகமும் மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். இதைத் தொடர்ந்து மே 30 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு மாறுகிறார். அதுவரை சுக்கிரன் மிதுன ராசியில் இருப்பார்.
மே மாதம் நடக்கவுள்ள இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மே 30 ஆம் தேதி வரை இந்த கிரகங்களின் சிறப்பு நிலைகள்களின் காரணமாக அதிகப்படியான நன்மைக்ள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு மன அமைதி உண்டாகும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளும் தானாகவே நடக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். உங்கள் பணிக்கு மரியாதை கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
சிம்ம ராசி:
இந்த வேளையில் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். வேலை தேடுபவர்கள் தற்போது புதிய வேலையில் சேர வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். படிக்கும், எழுதும் வேலையில் இருப்பவர்களுக்கு தற்போது நேரம் நன்றாக இருக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சுவையான உணவுகளை உண்பதில் ஆர்வம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | குருவால் உருவானது ஹம்ச ராஜயோகம், இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
துலா ராசி:
இந்த வேளையில் துலா ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எழுத்து மற்றும் அறிவார்ந்த பணிகளால் மரியாதை பெறுவீர்கள். புதிய ஆடைகள், அலங்காரம், வசதிகள் தொடர்பான விஷயங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி:
உங்கள் பணிக்கு மரியாதை கிடைக்கும். உங்கள் பேச்சின் இனிமை மக்களின் மனதை வெல்லும். இந்த காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். ஆடை-அலங்காரப் பொருட்களுக்குச் செலவு செய்யக்கூடும்.
தனுசு ராசி:
உத்யோகத்தில் உயர் பதவி கிடைக்கும். சம்பளம் உயரும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் நல்லுறவு உருவாகும். இட மாற்றம் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. மொத்தத்தில் கடின உழைப்பும் அலைச்சலும் இருக்கும். ஆனால் அதன் பலன்களும் கிடைக்கும். கடின உழைப்பால் கிடைக்கும் பலனை இந்த காலத்தில் முழுமையாக அனுபவிப்பீர்கள்.
கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்களுக்கு சொத்து மூலம் வருமானம் கூடும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்கள் பதவி அல்லது பொறுப்பு அதிகரிக்கலாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகரிக்கும் ஆனால் வருமானமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 25 நாட்களில் 5 ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ