அக்டோபர் 18 வரை இந்த `6` ராசிகளின் தலைவிதி சூரியனைப் போல் பிரகாசிக்கும்
ராசியில் சூரியனின் மாற்றத்தின் பலன் சில ராசிக்காரர்களுக்கும் சுபமாகவும் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி அக்டோபர் 18 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உகந்த நேரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சூரியன் ராசி மாற்றம் 2022 / சூரியன் பெயர்ச்சி 2022 பலன்: செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் நுழைந்துள்ளார். சூரியனின் ராசி மாற்றம் சங்கராந்தி எனப்படும். கன்னி ராசியில் பிரவேசித்த பிறகு கன்யா சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியன் இப்போது அக்டோபர் 18 வரை கன்னி ராசியில் இருப்பார். இதன் பிறகு துலாம் ராசிக்குள் நுழை வார். எனவே அக்டோபர் 18 ஆம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த ஆறு ராசிக்காரர்களின் தலைவிதி சூரியனை போல் பிரகாசிக்கும்.
மேஷம்
சூரியன் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் போது தடைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். அதேபோல் நிலுவையில் உள்ள பணிகள் இந்த நேரத்தில் முடிவடையும். தொழிலில் வெற்றி உண்டாகும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்
கடகம்
கடக ராசிக்காரர்களின் மூன்றாவது வீட்டில் சூரியனின் சஞ்சாரம் (சூரியன் பெயர்ச்சி) மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். தொழில், உத்தியோகத்தில் நல்ல பலன்களைக் காண்பீர்கள். பண பலம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், நீண்ட பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டாகும். எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்குங்கள்.
விருச்சிகம்
சூரியன் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பதினோராம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது மிகவும் சாதகமான பலனை ஏற்படுத்தி தரும். இதன் போது பயண யோகம் உண்டாகும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.
மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ