Daily Horoscope In Tamil: ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் கொண்டுள்ளன. அந்த வகையில். இன்று உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது சிறப்பானதாக அமையும் வாய்ப்பு அதிகம். இன்று உங்கள் ராசிக்கு வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா என்பதை இதில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் 


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் நிறைந்த நாளாக இருக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் சில லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், இருப்பினும் அவை பலனளிக்காது. பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். காதல் வாழ்க்கை வாழ்பவர்களின் உறவில் விரிசல் ஏற்படலாம். 


ரிஷபம் 


ரிஷப இன்று பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், அதனை நன்கு ஆலோசித்து பின் முடிவெடுக்கவும். 


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இளைஞர்களுக்கு இன்று வேலை உறுதியாகலாம். திடீர் நிதி ஆதாயத்தால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டுவதால் மேலடத்தின் கோபத்திற்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளது. 


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஏதாவது விசேஷமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் உங்களுக்காக சில பொருள்களை வாங்குவீர்கள். உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவாமல் போகலாம்.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி... சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய '4' ராசிகள்!


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுமாரான பலன் கிடைக்கும். இன்று நீங்கள் குடும்பத்தில் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். உங்கள் நண்பர்களில் ஒருவருக்கு நீங்கள் கொஞ்சம் பணம் கொடுத்து உதவும் நிலை வரலாம். வெளிநாட்டில் இருந்து வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகள் வந்து சேரும். 


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.  வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் புதிய திருப்பத்தைக் காணலாம். சமூகப் பணிகளால் உரிய அங்கீகாரம் கிடைக்கும். 


துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு அவர்களின் உறவு வலுபெறும். பண பரிவர்த்தனைக்கும் முன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண வரவுகளால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். 


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் மனைவியின் உதவியுடன் சில பிரச்னைகள் தீரும். பணியிடத்தில் சில பிரச்சனைகள் நடந்தால், அனுபவமுள்ள ஒருவரை அணுக வேண்டும்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: வேலை, வியாபாரத்தில் அமோக வளர்ச்சி...துன்பங்கள் தொலைந்து போகும்!!


தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பதவி வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவார்கள். 


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பான நாளாக இருக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிலவற்றை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று புதிதாக தொழில் தொடங்கினால் நல்ல நாளாக அமையும். நிதி ஆதாயத்தால் உங்கள் நிதி நிலை வலுப்பெறும்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், அதிலும் நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் தந்தையால் உங்களுக்கு சில வேலைகள் வரலாம். அரசியலில் முயற்சி செய்ய விரும்புவோருக்கு நாள் நன்றாக இருக்கும்.


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். சொத்து சம்பந்தமாக ஏதேனும் பழைய தகராறு இருந்தால் அதில் வெற்றி பெறலாம். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | அமாவாசை அன்று இந்த விஷயங்களை செய்தால் வீட்டில் நல்லது நடக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ