புதுடெல்லி: பூஜைகள் என்பது மனதுக்கு நிம்மதியைக் கொடுப்பது. முக்தியை அருளும் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆனல் அவருடைய பூஜையில் செய்யக்கூடாத விஷயங்களும் உண்டு. இவை சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி ருத்ரதாண்டவம் ஆடச் செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே சிவ பூஜையில் செய்யக்கூடாத விஷயங்கள் சிலவற்றை சொல்கிறோம். இவற்றைத் தவிர்த்து, மனப்பூர்வமாக இறைவனை வேண்டினால் சிவனின் அருட்பார்வை உங்களுக்கு கிடைக்கும்.


சிவன் அபிஷேகப்பிரியர் என்பதால் அவருக்கு அபிஷேகம் செய்வது மனதை குளுமையிஆக்கும். ஆனால், சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து வழிபாடு செய்வது என்பது மிகவும் இயல்பான வழிமுறை. அதிலும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், வழிபடுவதும், விரதம் இருப்பதும் சிறப்பு வாய்ந்தது.



திங்கட்கிழமையன்று சிவபெருமானையும், பார்வதியையும் வழிபட்டால், அவர்களின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ வழிபாட்டின் போது வில்வம்  தண்ணீர் மற்றும் பால் ஆகியவை சிவபெருமானுக்கு சாற்றுவது விஷேசமானது.


சிவனுக்கு கோவிலிலோ அல்லது வீட்டிலோ அபிஷேகம் செய்யும்போது உட்கார்ந்து செய்யவேண்டும். கோயிலுக்குச் சென்று சிவலிங்கத்திற்கு உங்கள் கையால் ஜலாபிஷேகம் செய்யும்போது உட்கார்ந்தே செய்ய வேண்டும். ருத்ராபிஷேகம் செய்யும் போது கூட நிற்கக் கூடாது.


புராணங்களின்படி, நின்று கொண்டு சிவலிங்கத்திற்கு நீர் வார்த்தால், அது சிவபெருமானுக்கு சென்று சேராது என்பதால், நீங்கள் செய்யும் ஜலாபிஷேகத்தின் புண்ணியம்  கிடைக்காது.



சிவனுக்கு மஞ்சள், குங்குமம் படைக்கக்கூடாது. தேங்காய் என்பது மங்களகரமான பொருள், அது  அன்னை லட்சுமி தேவி விஷ்ணுவுடன் தொடர்புடையது. எனவே சிவனுக்கு இளநீர் வழங்கக்கூடாது. 


மேலும் படிக்க | பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?


மணமில்லாத மலர்களை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது. ஆனால், அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். அர்ச்சனை செய்யும்போது, முழு மலர்களையே பயன்படுத்த வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சிக்கக்கூடாது.


தாழம்பூவை சிவ பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது. அதேபோல், மிகவும் காய்ந்த மற்றும் அழுகின பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. சிவனுக்கு ஊமத்தைப் பூக்கள் உகந்தது என்பதால் அதை அதிகம் பயன்படுத்தலாம். 


அதேபோல, வாழைப்பழத்தை நிவேதனமாக படைக்கும்போது, காம்பு இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும். அதேபோல வெற்றிலையில் நுனி இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | பெருமாளின் தரிசன உலா


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை)


மேலும் படிக்க | நடிகர் சூர்யாவின் மகள் தியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR