கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்தை வணங்குவார்கள். செவ்வாய்க்கிழமை முருக பெருமானை வழிபட்டு, வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுவார்கள். சனிக்கிழமையன்று சனீஸ்வரரை வழிபடுவார்கள். அந்தவகையில் வெள்ளிக்கிழமை அன்னை மகாலட்சுமியை வணங்குவதற்கு உகந்த நாள். வெள்ளிக்கிழமையின் அதிபதி சுக்கிரன். அரசனாக கருதப்படும் சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரது வாழ்க்கையில் செல்வமும் மகிழ்ச்சியும் செழிப்பும் தாராளமாக கிடைத்துக் கொண்டே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிரனையும், அன்னை மகாலட்சுமியையும் வழிபடுபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிறைந்திருக்கும். ஒருவேளை சில பிரச்சனைகள் இருந்தால் வெள்ளிக்கிழமை நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.  


வெள்ளிக்கிழமை லட்சுமி கடவுளை எப்படி வணங்குவது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - அதனால் கிடைக்கும் நன்மைகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்:


லட்சுமி வழிபாடு


ஜோதிட சாஸ்திரத்தின்படி, முதலில் வெள்ளிக்கிழமையன்று எழுந்து தினசரி சடங்குகளுக்குப் பிறகு குளிக்க வேண்டும். அதன் பிறகு, லட்சுமி தேவியை வெள்ளை ஆடை அணிந்து வணங்கி, ஸ்ரீ சுக்த பாதையை படிக்கவும். லட்சுமி தேவியை வழிபட தொடங்குமுன் தாமரை மலர் மாலையை அர்பணிக்க மறக்காதீர்கள். 


மேலும் படிக்க | மே மாத ராசிபலன் 2023: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை


இன்று வெள்ளிக் கிழமை என்பதால் செல்வம் சம்பந்தமான எந்த வேலைக்கும் புறப்பட்டாலும் அதற்கு முன் இனிப்பு தயிர் சாப்பிடுங்கள். வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு இனிப்பு தயிர் சாப்பிட்டுவிடுங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், அந்த வேலை வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. 


கருப்பு எறும்புகளுக்கு சர்க்கரை


மீண்டும் மீண்டும் வேலையில் சிக்கித் தவிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று கருப்பு எறும்புகளுக்கு சர்க்கரை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் வரை இந்த புண்ணிய வேலையை நீங்கள் செய்யலாம். 


கணவன்-மனைவி இடையே நிலவி வரும் மனக்கசப்பை நீக்க வெள்ளிக்கிழமையும் பரிகாரம் செய்யலாம். இதற்காக, வெள்ளிக்கிழமை உங்கள் படுக்கையறையில் ஜோடி பறவைகளின் படத்தை மாட்டி வைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இருவருக்குள்ளும் பற்றுதல் அதிகரிக்கத் தொடங்குகிறது. பிணைப்பு பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த புகைப்படத்தில் இருக்கும் ஜோடி புறாவைப் போல் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கணவன் மனைவிக்கு இடையே எழத் தொடங்கும். 


திருமணமாகாத பெண்களுக்கு உணவு 


ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுப்பெற என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால் அதற்கான எளிய பரிகாரமும் இங்கே இருக்கிறது. வெள்ளிக்கிழமை அன்று திருமணமாகாத 3 பெண்களை உங்கள் வீட்டிற்கு வரவழைத்து உணவளியுங்கள். மேலும், அவர்களுக்கு தட்சிணை கொடுப்பதுடன், மஞ்சள் ஆடைகளை எடுத்து வந்து கொடுத்து அனுப்புங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், லட்சுமி தேவியின் நேரடி ஆசி உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கும் மனதில் மகிழ்ச்சி உண்டாகி அவர்களுக்கும் திருமண உறவு சீக்கிரம் கைகூடும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு ரகசியமாக பணமழை பொழியும்! அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ