ஜூலை 2022 இல் ராசி மாறுகிறார் சனி பகவான்: சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்களின் கர்மாக்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சனி பகவான் கோப குணம் கொண்டவராக கருதப்படுகிறார். அவரது கோபப்பார்வை ஒருவர் மீது பட்டுவிட்டால், அந்த நபர் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு அளவே இருக்காது. 


சனி பகவான் அடுத்த மாதம் மாறுகிறார்


மற்ற கிரகங்களைப் போலவே, சனி பகவானும் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். தற்போது கும்ப ராசியில் அவர் அமர்ந்துள்ளார். அடுத்த மாதம் அதாவது ஜூலை 12 ஆம் தேதி அவர் மகர ராசியில் பிற்போக்கான நிலையில் சஞ்சரிக்கிறார். 


அடுத்த வருடம் ஜனவரி வரை அவர் இந்த ராசியில் இருப்பார். இதற்குப் பிறகு அவர் தனது கும்ப ராசிக்கு மீண்டும் வருவார். மகர ராசியில் அவரது சஞ்சாரத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கப் போகிறது. 20 நாட்களுக்குப் பிறகு எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


நாள்பட்ட நோய் ஏற்படலாம்


தனுசு: 


தனுசு ராசிக்காரர்கள் 20 நாட்களுக்குப் பிறகு சனிபகவானின் தீய பார்வைக்கு பலியாக வேண்டியிருக்கும். சில நாட்பட்ட நோய்களால் இவர்கள் பாதிக்கப்படலாம். கொடுத்த பணத்தை இழக்கலாம். திடீரென்று ஒரு புதிய நோய் உங்கள் உடலை ஆட்டிப்படைக்கலாம். இந்த காலத்தில் உடல் நலனில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | ஜூலை மாத கிரக மாற்றங்களால் குபேரனின் அருளை முழுமையாக பெறப்போகும் சில ராசிகள் 


எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு பலன் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். சனி பகவானின் இந்த அதிருப்தியை போக்க, நீங்கள் சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தை வழிபடலாம். ஏழை எளியவர்களுக்கு கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் தானம் செய்வதும் நன்மை தரும். 


வியாபாரத்தில் நஷ்டம் வரலாம்


சிம்மம்: 


சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த 6 மாதங்களும் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். நீங்கள் சில நீதிமன்ற விவகாரத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த காலத்தில் மிகவும் கனவமாக இருக்க வேண்டும்.


குடும்பத்தில் குழப்பமான சூழல் ஏற்படலாம். வாங்கிய கடனை அடைப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் திடீர் நோயையும் சந்திக்க நேரிடலாம். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஒவ்வொரு சனிக்கிழமையும் பசுவிற்கு உணவளிக்கலாம், வீட்டில் சனி பகவானின் மந்திரங்களை சொல்வது நன்மை பயக்கும். 


பிள்ளைகளின் கல்வியில் கவலை உண்டாகும்


மேஷம்: 


மேஷ ராசிக்காரர்களுக்கு 20 நாட்களுக்குப் பிறகு கடினமான நாட்கள் துவங்கும். சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்ய வேண்டி வரும். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். 


பிள்ளைகளின் கல்வியால் கவலை அடைவீர்கள். குடும்பத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். இந்த சூழ்நிலையில், சனி பகவானை மகிழ்விக்க, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஹனுமான் சாலிசா மற்றும் சனி சாலிசாவை பாராயணம் செய்வதன் மூலமும், அவற்றை மனப்பூர்வமாக நினைவுகூருவதன் மூலமும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் ராசிகள் இவை: உங்க ராசி என்ன 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR