ஜோதிடத்தில் சனியின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் சனியின் செயல்களுக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். சனி பகவான் இந்த நேரத்தில் வக்ர நிலையில் பின் நோக்கி கும்பத்தில் உள்ளது. ஜூலை 12 ஆம் தேதி, மகர ராசியில் சனி வக்ர பெயற்சி ஆக உள்ளார். ஜனவரி வரை மகர ராசியில் இருக்கும் சனி பகவான் இந்த 6 மாதங்களில் 3 ராசிக்காரர்களுக்கும் தனது ஆசிகளைப் பொழிவார். எனவே இந்த சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். பிற்போக்கான சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த மக்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகர ராசியில் சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு பலமான பலன்களைத் தரும்


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் வர ஆரம்பிக்கும். அனைத்து வேலைகளும் வெற்றியடையும். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைவில் முடிவடையும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் பெரிய மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பல வழிகளில் பணம் வந்து குவியும். கௌரவம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சூப்பர், 3 ராசிகளுக்கு சுமார் 


சிம்மம்: மகர ராசியில் சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வேலையில் வெற்றி உண்டாகும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பழைய விவகாரம் தீர்வுக்கு வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதுவரை செய்யாமல் இருந்த பணிகள், இனிமேல் செய்யப்படும்.


மகரம்: சனிப்பெயர்ச்சி மகர ராசியிலேயே நடக்க இருக்கிறது. எனவே, மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பு வாய்ந்ததாக அமையும். மகர ராசிக்காரர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லா வகையிலும், இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும்.


3 ராசிக்காரர்களுக்கு தீமைகள் ஏற்படும்


கும்பம்- மகர ராசியில் சனி நுழைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வீட்டில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள், இல்லையெனில் தேவையில்லாத பிரிவினை ஏற்படும். பட்ஜெட்டை பார்த்து செலவு செய்யுங்கள். 


துலாம்- சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்களை கொடுக்கலாம். அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். தேர்வு மற்றும் நேர்காணல் கொடுப்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 


மிதுனம்- மகர ராசியில் சனியின் பிரவேசம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொல்லைகளைத் தரும். அவர்கள் பணத்தைப் பெறுவார்கள், ஆனால் அதிகரித்த செலவுகள் அவர்களைச் சேமிக்க அனுமதிக்காது. குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனை வரலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR