நவகிரகங்களின் அரசரான சூரியன், கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ந்து 26 நாட்கள் ஆகிவிட்டன. சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் தமிழ் மாதங்களில், சிம்மத்தில் சூரியன் இருக்கும் மாதம் ஆவணி மாதம் ஆகும். சூரியனின் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கும். அதிலும் தற்போதைய கோள்களின் நிலவரப்படி, சிம்மத்தில் சூரியன் இருக்கும் ஆவணி மாதம் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆவணியில் சிம்மத்தில் சூரியன்


சூரியனின் மகன் சனீஸ்வரர் என்றாலும், இருவரும் எப்போதும் மோதலில் இருக்கும் இரு துருவமான கிரகங்கள். இந்த நிலையில், சூரியன் சிம்மத்தில் இருக்கும்போது, சனியின் நேரடி கோச்சார பார்வை பலருக்கு பாதகமானதாக இருக்கும். தற்போதைய நிலையில் சூரியன், தனது சொந்த வீடான சிம்மத்தில், மூலத் திரிகோண வீட்டில் ஆட்சியான அமைப்பில் இருக்கிறார்.


சூரியனின் மகன் சனீஸ்வரர்
தந்தை சிம்மத்தில் இருந்தால், சனீஸ்வரர் தன் சொந்த வீடாகிய கும்பத்தில் மூலத்திரிகோண வலுடன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இரு கிரகங்களுமே தங்களது சொந்த வீட்டில் மூலத் திரிகோண வலுவுடன் சம சப்தமமாக ஒன்றை ஒன்று உக்கிரமாகப் பார்க்கும் நிலையில் தற்போது அமர்ந்துள்ளனர். 


மேலும் படிக்க | செப்டம்பர் மாதத்தில் ராசி மாறும் சுக்கிரன், யாருக்கெல்லாம் ராசியானவராக இருப்பார்?  


சனி மற்றும் சூரியன் நேரடிப் பார்வை
ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மாதம் முழுவதும் சூரியன் மற்றும் சனி நேர்பார்வையில் வருவது இயல்பானது தான். ஆனால், தற்போதைய அமைப்பில் இரு கிரகங்களும் ஆட்சி வீடு மற்றும் மூலத்திரிகோண வீட்டில் இருந்து, பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விதத்தில் விசேஷமானது என்றால், மறுபுறத்தில் பலருக்கும் பாதகமான விளைவைக் கொடுக்கும். இதற்கு காரணம் தந்தையும் மகனும் தங்கள் சொந்த வீட்டில் உச்சம் பெற்று இருப்பது தான்.


30 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அபூர்வ அமைப்பு
இந்த அமைப்பு 30 ஆண்டுகளுக்கு பிறகு வரும் நிலையாக இருக்கிறது. சூரியனுடைய மகனாகவே சனி இருந்தாலும், தந்தைக்கும் மகனுக்கும் கடுமையான பகை இருப்பதும், இருவரும் நேர் எதிர் குணாதிசயங்கள், தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் மிக ஒளி பொருந்திய வெளிச்ச கிரகம் என்றால், சனி இருளைக் குறிப்பிடும் கருமை நிற கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க - குரு வக்ர பெயர்ச்சி.. மகா பொற்காலம், அதிர்ஷ்ட பண மழை இந்த ராசிகளுக்கு


ஒளி தத்துவம்
ஜோதிடமே ஒளி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்பதால், மிக ஒளி பொருந்திய சூரியனும், சனியும் ஒன்றை ஒன்று தற்போதைய நிலையில் அதிலும் மூல திரிகோண நிலையில் இருந்து பார்த்துக் கொள்வது, பொதுவாக நல்லதல்ல. ஒருவரின் ஜாதகத்தில் சனியோ அல்லது சூரியனோ எந்த ஆதிபத்தியத்திற்கு அதிபதியாக வருகிறதோ, அதனுடைய ஆதிபத்திய அமைப்புகள் அதனுடைய காரக பலன்கள் அனைத்தும் தற்போதைய நிலையில் அடிபடும். இதனால், 12 ராசிகளுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இந்த நிலை, செப்டம்பர் மாத சூரியப் பெயர்ச்சிக்கு பிறகு மாறிவிடும். ஆனால், பாகை அடிப்படையில் பார்த்தால், புரட்டாசி அமாவாசைக்கு பிறகு அதாவது அக்டோபர் இரண்டாம் நாளுக்குப் பிறகு சரியாகிவிடும். அதுவரை, இந்த இரு  கிரகங்களிலிருந்து, கிடைக்கக்கூடிய சுபபலன்கள் பலருக்கும் கிடைக்கவே கிடைக்காது அல்லது கிடைத்தாலும் ஏன் கிடைத்தது என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பது போல இருக்கும். எனவே சனீஸ்வரரை சனிக்கிழமையில் வழிபடுவதும், தினசரி சூரிய நமஸ்காரம் செயவதும் நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ரிஷபத்தில் குரு வக்ரமானால் பாவம் மோசமான காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்! இவர் வக்ர குரு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ