Sukra Nakshatra Peyarchi In Pooran: ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மிகவும் சுப கிரகமாக கருதப்படுகிறது. அதனுடன் இந்த கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு, போன்றவையை அள்ளித் தரும் கிரகமாகவும் கருதப்படுகிறார். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார் சுக்கிரன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். அனைத்தும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாகும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


மேலும் படிக்க | Sani Vakra Peyarchi Palangal: சனி ஆட்டம் தொடங்கிவிட்டது.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்


துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். அதனுடன் வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள். வெளியூர் பயணம் மேற்கவலவீர்கள். செல்வம் பெருகும். உங்களின் அனைத்து ஆசைகளும் மகிழ்ச்சியுடன் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் இருந்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.


தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலையால் த்ருப்தி அடைந்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், இதனால் நிதி நிலை முன்னேற்றம் அடையும். பதவி உயர்வு பெறலாம். பொருளாதார அம்சம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். அதிர்ஷ்டம் வாய்ப்புகள் பெறலாம்.


மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சாதகமாக நடக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். செல்வ செழிப்பு உண்டாகும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Naga Panchami Fasting Myths : காலசர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாகபஞ்சமி வழிபாடு! பாம்புக்கு பால் வார்த்தால் தோஷம் நீங்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ