Good Days For Buying Gold: இந்து மதத்தில் தங்கம் மிகவும் மங்களகரமான உலோகமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அதை வாங்கும் போது நல்ல மற்றும் அசுபமான நாட்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மங்களகரமான நாளில் வாங்கும் தங்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால்தான் மக்கள் அட்சய திருதியை மற்றும் தந்தேராஸ் போன்ற மங்களகரமான சந்தர்ப்பங்களில் தங்கத்தை அதிகமாக வாங்குகிறார்கள்.


இந்து மதத்தில் தங்கம் மட்டுமின்றி, ஆடைகள், பாத்திரங்கள், தளவாடங்கள், பூஜைப் பொருட்கள் போன்ற பல பொருட்களை வாங்கும் முன் சுப மற்றும் அசுப நாள்கள் மற்றும் சுப நேரங்களை கவனிப்பது கடைபிடிக்கப்படுகிறது. மங்கள நாளில் வாங்கும் பொருள்கள் வீட்டில் ஐஸ்வர்யம் போன்றவற்றையும் அதன் பலன்களையும் தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. தங்கம் வாங்க எந்த நாள் உகந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | கஜகேசரி யோகம்... ஆகஸ்டில் பணம், வெற்றி, இன்பம் என அனைத்தையும் பெறும் ‘சில’ ராசிகள்!


தங்கம் வாங்க உகந்த நாள்


அட்சய திருதியை அல்லது தந்தேராஸ் தவிர, நீங்கள் மற்ற நல்ல நாள்களிலும் தங்கம் வாங்கலாம். இந்த நாட்களிலும் நீங்கள் வாங்கும் தங்கத்தின் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள், மேலும் மகாலட்சுமியின் ஆசியால் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். வாரத்தின் கிழமை பற்றி பேசினால், நீங்கள் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் வாங்கலாம். ஜோதிட சாஸ்திரப்படி, வாரத்தின் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் வாங்கப்படும் தங்கம் ஜாதகத்தில் குரு மற்றும் சூரியனின் நிலையை பலப்படுத்துகிறது. 


பூச நட்சத்திரம் தங்கம் வாங்க மிகவும் உகந்தது


வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், பூச நட்சத்திரத்திலும் தங்கம் வாங்கலாம். பூச நட்சத்திரத்தில் எந்த நாளிலும் தங்கம் அல்லது தங்க ஆபரணங்களை வாங்கலாம். இந்த நட்சத்திரத்தில் வாங்கும் மங்களகரமான பொருட்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பொழிந்து வீட்டிற்கு ஆசீர்வாதத்தைத் தரும்.


இந்த நாட்களில் தங்கம் வாங்கக்கூடாது


தங்கம் என்பது சூரிய கிரகத்தின் சின்னம். சூரியனுக்கும் சனிக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. அதனால் சனிக்கிழமைகளில் தவறியும் தங்கத்தை வாங்காதீர்கள். சனிக்கிழமையில் தங்கம் வாங்குவது பொருளாதார நிலையை பாதிக்கும் எனவும், சனி தேவன் கோபப்படுவார் என்றும் கருதப்படுகிறது. இது தவிர, கிரகணம் இருக்கும் போது கூட தங்கம் வாங்க வேண்டாம். கிரகணம் அல்லது சூதகத்தின் போது தங்கம் வாங்கவோ, எந்த சுப காரியங்களையும் செய்யவோ கூடாது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சந்திரன் இந்த ராசிகளுக்கு அஷ்ட ஐஸ்வர்யத்தை தருவார்.. பண மழை கொட்டும்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ