Sun Transit With Jupiter 2023: சனியுடன் சேர்ந்து கும்ப ராசியில் இருக்கும் சூரியன், இந்த மாதம் மீன ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன்பிறகு மேஷ ராசியில் குருவுடனும் இணைவார் சூரியன். இது பல ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும். இந்த அபூர்வ இணைப்பால் நான்கு ராசியினரின் வாழ்வு வளமடையும். இத்தனை நாட்களாக நிதி சிக்கல்களில் இருந்தவர்களுக்கும் ஆசுவாசம் கொடுக்கிறார் சூரிய பகவான். திருமணத்தடை, மனதில் குழப்பங்கள் என வாழ்க்கையை நொந்து நூலாக போயிருந்த பலருக்கும் நிம்மதியை அளிக்கும் சூரிய குரு யுதி இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடு நிறைய மகிழ்ச்சி என்ற செல்வத்தை நிரப்பும் குரு மற்றும் சூரியனின் கூட்டு, பண வரவையும் கொடுக்கும். வியாழனின் ராசியில் சூரியன் இணைவதால், ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்கார ராசிகள் இவை


குரு சூரியன் யுதி 2023


இந்த நல்ல தற்செயல் நிகழ்வு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23 அன்று நடைபெறும். சூரியனின் பெயர்ச்சி ஏற்படுத்தும் இரண்டு பெரிய கிரகங்களின் இணைவால், இந்த 4 ராசியினரும் தொட்டதெல்லாம் பொன்னாகும், மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.


மேலும் படிக்க | karma karagan: ஏழரையா? கண்டச்சனியா? சனி மகாதசை என்றாலும் பரிகாரம் அவசியம்


சிம்ம ராசி


சூரியனும் குருவும் இணைவதால் மிகப்பெரிய நன்மைகளைப் பெறும் ராசிகளின் பட்டியலில் முதலில் வருவது சிம்ம ராசி. சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இது யோகமான காலம். அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் புதிய பொறுப்பும் முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும்.


 மிதுனம்


குருவுடன் கூட்டு சேர்ந்து, மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவார் சூரியன். வாழ்க்கையில் சுபமான காலம் இது என்று சொல்லும் அளவுக்கு பல நல்ல விஷயங்களை நடத்திக் கொடுப்பார் சூரியன். சொத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நேரம் உகந்தது. எதிர்பாராத விதத்தில் திடீர் பணவரவு வந்து சேரும்.


மீனம்


சூரியன் மற்றும் குரு கிரகங்கள் ஒன்றிணைவதால், மீன ராசியினர் வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம், தொழிலில் திருப்தி, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி என அனைத்து இடங்களிலும் நிம்மதியைப் பெறும் காலம் இது. வேலை அதிகமானாலும் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் அதிகரிக்கும்.


மேஷம்


வேலை மற்றும் தொழிலில் இது முன்னேற்றம் கொடுக்கும் நேரம். காலம் கனிந்து வந்திருப்பதால், இதுவரை தள்ளிப்போட்டு வந்திருந்த புது முயற்சிகளை எடுக்கலாம். த்ட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும், எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றிகளைப் பெறும் மேஷ ராசியினருக்கு, குடும்பத்தினரின் அனுசரிப்பும் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். குடும்பத்துடன் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ