விநாயக சதுர்த்தி 2023: உங்கள் ராசிப்படி விநாயகப் பெருமானை வழிபடுங்கள்..!
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
முதன்மைக் கடவுளாகக் கருதப்படும் விநாயகர், செழிப்பு, நேர்மறை மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாகக் கருதப்படுகிறார். எந்த ஒரு வேலையையும் தொடங்கும் முன் கணபதியை வணங்கினால் காரியம் வெற்றிகரமாக முடிவடையும். விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றவர்கள் எதிலும் தோல்வி அடைவதில்லை. நீங்களும் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற விரும்பினால், விநாயகப் பெருமானை விநாயக சதுர்த்தி அன்று உங்கள் ராசிக்கு மந்திரம் மற்றும் உணவுப் பொருட்களைச் சமர்ப்பித்து வழிபடுங்கள். விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன செய்ய வேண்டும், விநாயகப் பெருமானின் அருளைப் பெற என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ‘கணேசனை நினை..’ விநாயகரை வழிபடுவதால் ‘இந்த’ 8 பலன்கள் கிடைக்கும்..!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஓம் விக்னேஸ்வராய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனுடன் மாதுளை அல்லது பேரீச்சம்பழம் லட்டு செய்து சிவப்பு ரோஜாவை வைத்து வழிபடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் ஓம் சிவபுத்ராய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பச்சை ஏலக்காயில் லட்டு செய்து கணபதியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் ஓம் லம்போதராய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதனுடன் அரிசிக் கஞ்சி மற்றும் வெள்ளை ரோஜா அல்லது வெள்ளைப் பூவை வைத்து கணபதியை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஓம் கௌரிபுத்ராய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மேலும், இந்த ராசிக்கு வெண்ணிறப் பூக்களால் அர்ச்சனை செய்து கணபதிக்கு அரிசிக் கஞ்சி செய்வது நல்லது.
சிம்மம்
விநாயகர் சதுர்த்தி நாளில் சிம்ம ராசிக்காரர்கள் ஓம் பக்தவாசாய நம என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பேரீச்சம்பழம், வெல்லம், செவ்வரளி மலர்களால் வழிபடுவதும் நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஓம் லம்போதராய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதனுடன் கணபதிக்கு உளுந்து லட்டு, திராட்சை ஆகியவற்றைப் படைத்து வழிபட வேண்டும். இதனால் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஓம் ஸ்வகல்யாணஹேத்வே நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மேலும் இந்த ராசியினர் விநாயகப் பெருமானுக்கு விநாயக சதுர்த்தி அன்று வாழைப்பழம், வெள்ளைப் பூக்கள் மற்றும் தூபம் காட்டி வழிபடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் விநாயக சதுர்த்தி அன்று ஓம் ஏகாந்தாய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மாதுளை மற்றும் பேரிச்சம்பழம் லட்டு மற்றும் சிவப்பு ரோஜாக்களை இதனுடன் சேர்த்து வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஓம் உமாசுதாய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மேலும் விநாயகருக்கு மஞ்சள் இனிப்பும் வாழைப்பழமும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஓம் விக்னஹராய நம விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அதேபோல் விநாயகருக்கு எள் லட்டு வைத்து வழிபட்டால் விநாயகரின் அருளைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியினர் 108 முறை ஓம் சுகதாயை நம என்று கூறி, விநாயகப் பெருமானுக்கு பால்கோவா செய்து, விரும்பிய கரிகேயை வைத்து விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
விநாயகர் சதுர்த்தி அன்று மீன ராசிக்காரர்கள் ஓம் பார்வதிபுத்ராய நம என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து தேங்காய் லட்டு, பாதாம் சேர்த்து வழிபட விநாயகரின் அருள் கிடைக்கும்.
மேலும் படிக்க | குபேர யோகம் செல்வம் பெரும்.. சனியால் அடுத்த 140 நாட்கள் இந்த ராசிகளுக்கு உச்சயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ