சூரிய கிரகணம் 2023: புதன், செவ்வாய் கிரங்கங்களால் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
Surya Grahan 2023: வரும் ஏப். 20ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், புதன், செவ்வாய் கிரகங்கள் ராசி மாற்றத்தை நிகழ்த்த உள்ளன.
மங்கள புதன் பரிவர்த்தனை யோகம்: இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில் சூரிய கிரகணம் என்பது மங்களகரமானதாக கருதப்படவில்லை. இந்த ஆண்டு, ஏப்.20ஆம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழும். மேலும், இந்த நாளில் கிரகங்களின் நிலை மிகவும் நன்றாக இருக்கும். சூரிய கிரகண நாளில் செவ்வாய்யின் ராசியான மேஷ ராசியில் புதன் இருப்பார்.
மறுபுறம், புதனின் சொந்த ராசியான மிதுன ராசியில் செவ்வாய் இருப்பார். இந்த வகையில் மேஷ ராசியில் புதன் சஞ்சாரமும், மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரமும் ராசி மாற்றத்தை உருவாக்குகிறது.
இந்த யோகத்தின் சுப, அசுப பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரிய கிரகண நாளில் செவ்வாய் மற்றும் புதன் உருவாக்கும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு நல்லது, யாருக்கு அசுபமானது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | 12 ஆண்டு...இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், பண மழை கொட்டும்
இந்த ராசிக்காரர்களுக்கு ராசி மாற்ற யோகம் அமையும்
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகண நாளில் செவ்வாய் மற்றும் புதன் சஞ்சாரம் நல்ல பலனைத் தரும். இவர்கள் தொழிலில் பலன் பெறலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
இந்த சூரிய கிரகணம் செவ்வாய்-புதன் சிறப்பு ஸ்தானத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். வியாபாரம் வளரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின்போது உருவாகும் ராசி மாற்ற யோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். பெரிய சாதனைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இந்த யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கும் பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். வேலை விஷயமாக நேரம் நன்றாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால், காலம் நல்ல பலன்களைத் தரும்.
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
மேஷம், ரிஷபம், கன்னி, துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிகளுக்கு மேஷத்தில் புதன் சஞ்சாரமும், மிதுனத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்றதாக இருக்கும். இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரலாம். செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். செயல்பாட்டில் சிக்கல் இருக்கலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யவோ கசப்பாக பேசாவோ வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | சதய நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி, அடுத்த 8 மாதம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ