சுக்கிரன் அஸ்தமனம் இன்று: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செழிப்பு.... சுபயோகம் ஆரம்பம்
Shukra Ast, Impact on Zodiac Signs: சுக்கிரன் அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு சுப யோகம் உருவாகி வருகிறது.
சுக்கிரன் அஸ்தமனம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான முக்கியத்துவம் உள்ளது. இதில், சுக்கிரன் கிரகம் ஆடம்பர வாழ்க்கை, உலக இன்பம் ஆகியவற்றின் காரணியாக உள்ளது. செல்வம், ஆடம்பரம், உலக மகிழ்ச்சி, காதல், நட்பு, வசீகரம், பேச்சாற்றல் ஆகியவற்றை அளிக்கும் சுக்கிரன் கிரகத்தின் முக்கியத்துவம் மனிதர்களின் வாழ்வில் அதிகமாக இருக்கும்.
சுக்கிரன் அஸ்தமனம்:
சுக்கிரன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி, அதாவது இன்று . இரவு 07:37க்கு அஸ்தமனம் ஆகிறார். சுக்கிரன் தற்போது வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜோதிட கணக்கீடுகளின்படி, எந்த ஒரு கிரகமும் வக்ர இயக்கத்தில் இருக்கும் போது, அதன் அசுப விளைவுகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் இந்த பலவீனமான நிலை உள்ளவர்கள் கெட்ட காலங்களை சந்திக்க நேரிடும். ஆனால் சுக்கிரன் வக்ர நிலையில் அஸ்தமிப்பதால் அதன் அசுப பலன்கள் குறையும்.
ராசிகளில் இதன் தாக்கம்
சுக்கிரன் அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல சுப யோகம் உருவாகி வருகிறது. இவர்கள் செல்வச் செழிப்புடன் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் அடைவார்கள். இவர்களது வாழ்வில் சுக்கிரனின் அஸ்தமனம் மங்களகரமானதாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். அந்த 5 அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுக்கிரன் அஸ்தமனத்தால் நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகள்:
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அஸ்தமனம் மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷபம் சுக்கிரனால் ஆளப்படுகிறது. அதனால் இந்த ராசிக்கு நல்ல பலன் கிடைக்கும். பொருள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள், ஆடைகள், நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும். நிதி ஆதாயம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். லட்சுமி அன்னையின் அருள் மழையாய் பொழியும். பண வரவால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அஸ்தமனம் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ஆளுமை வித்தியாசமான பொலிவைப் பெறும். நீங்கள் வகுக்கும் அனைத்து திட்டங்களிலும் வெற்றி உண்டாகும். கூட்டுப் பணிகள் முன்னேற்றமடையும். நிதி நிலை மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு அருள் பொழிவார்! டபுள் கொண்டாட்டம்
சிம்ம ராசி
சுக்கிரனின் அஸ்தமனத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வம், கௌரவம், மரியாதை ஆகியவை கிடைக்கும். நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் திட்டம் வெற்றி பெறும். முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். தடைபட்ட பணிகள் எளிதாக முடிவடையும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உங்கள் கணக்கில் அதிக பணம் சேரும். இந்த நேரம் காதல் உறவுகளுக்கு நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் சுக்கிரனின் சுப பலன்கள் அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும். உங்களின் வசதிகளும் அதிகரிக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல துணை கிடைக்கும். முன்பை விட செலவினங்களில் அதிக கட்டுப்பாடு இருக்கும். இந்த நேரத்தில் பணத்தை சேமிப்பீர்கள்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களை அளிக்கும். நீண்ட பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் நிலை மேம்படும், கடினமாக உழைத்தால் பலன் கிடைக்கும். தொழிலதிபர்கள் இதனால் அதிக லாபம் அடைவார்கள். காதல் வாழ்க்கைக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: ஆடிப் பெருக்கு... இந்த 4 ராசிகளுக்கு அதிஷ்டமான நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ