ஜூலையில் இவர்களின் மீது சனியின் தாக்கம் தீரும், அபரிமிதமான வெற்றி கிடைக்கும்
Shani Rashi Parivartan 2022: சனி பகவானின் நிலை ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை பலனளிக்கும் அதே வேளையில் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
கிரகங்களின் நடுவரான சனி பகவான் ஜூலை 12-ம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். சனி தற்போது கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். கும்ப ராசியில் வசிக்கும் போது, சனி ஜூன் 5 ஆம் தேதி வக்ர நிலையில் இருந்தது. சனி வக்ர நிலையில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைவார். சனியின் இந்த நிலை பல ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன்களை ஏற்படுத்தும். அதன்படி மகர ராசியில் சனி பெயர்ச்சியான உடன் இரண்டு ராசிக்காரர்களுக்கு சனி சதையில் இருந்து சிறிது காலம் விடுதலை கிடைக்கும்.
இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு சனி தசை முடியும்
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். அதன்படி கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. இந்த ராசிக்காரர்கள் ஏப்ரல் 29 முதல் சனியின் மகாதசையின் பிடியில் உள்ளனர். சனி ராசி மாற்றத்துடன் மிதுனம் மற்றும் துலாம் ராசியில் சனி தசை முடிவடைந்தது. ஆனால் சனி மகர ராசியில் நுழைந்தவுடன் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை ஆரம்பிக்கும். இதனுடன் கடகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசையில் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | ஜூலை மாத கிரக மாற்றங்களால் குபேரனின் அருளை முழுமையாக பெறப்போகும் சில ராசிகள்
மகத்தான வெற்றி கிடைக்கும் -
கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் தொல்லைகள் ஜூலை 12-ம் தேதி ராசி மாறியவுடன் தீரும். அவர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். உடல் மற்றும் மன உளைச்சல் குறைவாக இருக்கும்.
இந்த 3 ராசிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தீய பார்வைக்கு பலியாக வேண்டியிருக்கும். சில நாட்பட்ட நோய்களால் இவர்கள் பாதிக்கப்படலாம். கொடுத்த பணத்தை இழக்கலாம். திடீரென்று ஒரு புதிய நோய் உங்கள் உடலை ஆட்டிப்படைக்கலாம். இந்த காலத்தில் உடல் நலனில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். நீங்கள் சில நீதிமன்ற விவகாரத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த காலத்தில் மிகவும் கனவமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கடினமான நாட்கள் துவங்கும். சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்ய வேண்டி வரும். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் ராசிகள் இவை: உங்க ராசி என்ன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR