மகர சங்கராந்தி என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி சூரிய கடவுளை போற்றும் முக்கியமான பண்டிகை ஆகும். சூரியன் மகர ராசிக்கு மாறுவதையும், குளிர்காலத்தின் முடிவைக் குறிக்கும் பண்டிகையான பொங்கல் திருந்தாள்,அறுவடைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், இது உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி, பொதுவாக லீப் ஆண்டுகளைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி வரும். இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மகர சங்கராந்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் விரும்பும் மார்கழி மாதம் முடிந்து, பொங்கல் திருநாளுடன் தை மாதம் தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், மகர ராசிக்கு சூரியன் பெயரும் நாளை, பெரும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.


தமிழ்நாட்டில் பொங்கல், உத்தரபிரதேசத்தில் மகர சங்கராந்தி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் மகி, மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரப் பிரதேசம், மேற்குப் பகுதிகளில் பௌஷ் சோங்கராந்தி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.


தமிழர்கள் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடினால், வங்காளம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா என ஒவ்வொரு பகுதியிலும் மகர சங்கராந்தி  கொண்டாடுவதற்கு காரணங்கள் வேறுபடுகின்றன. ஒரு நம்பிக்கையின்படி, சங்கராசுரன் என்ற அரக்கனை கொன்றதைந் நினைவுபடுத்தும் நாளாக மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.


மேலும் படிக்க | மகர சங்கராந்தி முதல் பட்டையை கிளப்பப் போகும் 3 ராசிகள்! அதிர்ஷ்டக்காற்று வீசும்


இதற்கு வலு சேர்க்கும் கதை மகாபாரத்தில் உள்ளது. தனது விருப்பப்படி இறக்கும் வரம் பெற்ற பிதாமகர் பீஷ்மர், மகாபாரத யுத்தம்  முடிந்து, தனது விருப்பம் நிறைவேறிய பிறகும், மகர சங்கராந்தியன்று உயிர் துறக்க முடிவு செய்து அம்புப்படுக்கையில் வலியை அனுபவித்துக் கொண்டு காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கமாக தமிழ்நாட்டில் பலரும் சூரியன் உதிக்கும்போது பொங்கல் வைப்பார்கள் என்றால், சிலர் நல்ல நேரம் பார்த்தே  பொங்கலை அடுப்பில் ஏற்றும் வழக்கம் வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி காலை 7:15 மணி முதல் மாலை 5:46 மணி வரை பொங்கலுக்கான சுப முகூர்த்தம் உள்ளது. பொங்கப் பானை வைப்பதற்கான நேரம் இது. 10 மணி நேரம் 31 நிமிடங்கள் நீடிக்கும் இந்த முகூர்த்த நேரத்தில் பொங்கல் பானை ஏற்றுவது, பொங்கலிடுவது பாரம்பரிய சடங்குகள், பிரார்த்தனைகள் செய்வதற்கு ஏற்றது.  


மகர சங்கராந்தி தானம்


ஜோதிட சாஸ்திரப்படி, மகர சங்கராந்தி தினத்தன்று காலையில் குளித்த பிறகு, சூரிய பகவானை வழிபட வேண்டும். பொங்கல் வைத்து வழிபடுவது, அவரவர் குடும்ப வழக்கப்படி செய்துக் கொள்ளலாம். வெல்லம், அரிசி, எள், கிச்சடி போன்றவற்றை தானம் செய்யலாம். பொங்கல் தினத்தில் ஆடை, தானியங்கள், பணம் என தானங்களைக் கொடுப்பதால், வாழ்க்கையில் வளம் பெறலாம். அதிலும், பொங்கல் நாளன்று கருப்பு எள்ளை தானம் செய்வதால் சூரியனின் அருளால் செல்வமும், தானியமும் பெருகும், சனி தோஷமும் நீங்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நீங்கள் ஜனவரி மாதம் பிறந்தவரா? அப்போ உங்கள் குணம் இப்படித்தான் இருக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ