கும்ப ராசியில் சனி பெயர்ச்சி பலன்கள் 2023: வேத ஜோதிடத்தின்படி, சனி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். மனித வாழ்வில் கிரகங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அதேபோல் வேத ஜோதிடத்தில் நீதியின் கிரகம் சனி என்பார்கள். ஒருவருடைய செயல்களை ஏற்ப பலன் கொடுப்பவர் சனி. இந்த கிரகம் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி, அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதேபோல் சனி சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 29.5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. அதன்படி தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு  கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் செய்துள்ளார், இது பல ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். அந்த ராசிகளை எவை என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி (Aries Zodiac Sign) - சனி தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும், ஏனெனில் சனி லாப வீட்டில் செயல்பாட்டின் அதிபதியாக செயல்படுகிறது. இதன் போது உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் பெறலாம். நீங்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில், நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும் மேலும் பிரச்சினைகள் தீர்க்கப்படும். கடந்த காலத்தில் செய்த முதலீடு இப்போது பலன் தரும், மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும் 


ரிஷப ராசி (Taurus Zodiac Sign) - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி கிரகம் சுப பலன்களை அளிக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் நிறைவேறும். சனியும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம், சொத்துப் பெருக்கம் ஆகியவற்றை அருளுவார். உங்கள் தடைபட்ட வேலை இப்போது முடிவடையும். ஏற்கனவே வேலையில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.


மிதுன ராசி (Gemini Zodiac Sign) - மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்க தொடங்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும். நீங்கள் பயணம் செய்யலாம் மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள்.


துலாம் ராசி (Libra Zodiac Sign) - துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். சனி உங்கள் பெயர்ச்சி அட்டவணையில் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது, அதே நேரத்தில் அவர் மகிழ்ச்சி மற்றும் வளங்களின் அதிபதியாக ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். எனவே நீங்கள் ஒரு சொத்து அல்லது வாகனம் வாங்கலாம், உங்கள் செல்வத்தை அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயமும் கிடைக்கும். மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ